முதல் அடியுடன் முன்னோக்கிச் செல்லும் குழந்தை

வளர்ச்சி பகுதிகள்

அசைவுகள் சார்ந்த சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் குழந்தையின் சமநிலை, உடல் விழிப்புணர்வு மற்றும் கண்-கால்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புகளை மேம்படுத்த உங்களால் முடிந்த முதல் முக்கிய அடியை முன்னெடுத்து வையுங்கள்.

விளக்கம்

உங்கள் செல்லக் குழந்தை, ஒரு நாள் சோபா(sofa )வை பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்வர். சில தினங்களில் உங்கள் கைகளை பிடித்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடக்க முயற்சி செய்வார்கள். குழந்தைகள் தங்களது முதல் அடியை எடுத்து வைக்கும் போது பெற்றோர்களாகிய உங்களுக்கு அதுவொரு விலைப்பதிப்பற்ற மகிழ்ச்சியூட்டும் தருணமாகும்.

குழந்தைகள் வழக்கமாக 12 மாத வயதிலேயே நடை பழக ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இது குழந்தைக்கு குழந்தை மாறுபடும். முதலில் அவர்களின் முயற்சிகள் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் தவறாது நீங்கள் கொடுக்கும் ஊக்கம் கைதட்டல்கள் என்பன அவர்கள் சீராக நடப்பதற்கு வழிவகுக்கும்.