வண்ணமயமான உலகம்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

வண்ணமயமான உலகம் - பொருட்களை அறிந்துக்கொள்ளல் மற்றும் திறமையாக கையாளுதல் போன்றவற்றில் அவர்களின் திறன்களை விருத்தி செய்தல்

விளக்கம்

நிறங்களை விரும்பாத பிள்ளைகளே இருக்க முடியாது. எல்லா நிறங்களையும் அவர்களால் அடையாளம் காண முடியாது. எனினும் சிவப்பு, மஞ்சள் மற்றும் நீலம் போன்ற முதன்மை வர்ணங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியும். உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவழித்து கலை ஆக்கங்களை உருவாக்கிடுங்கள்.

முதலில் அவர்கள் க்ரேயன்களைப் (Crayons) பிடித்துக்கொள்வது எளிதல்ல. ஆனாலும் 12 - 18 மாதங்களுக்குள் அவர்களாகவே கிறுக்கல்களை மேற்கொள்வார்கள்.