மகிழ்ச்சித் தரும் சொற்களுடன் பேச ஆரம்பியுங்கள்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

புதிய சொற்களையும் புதிய ஒலிகளையும் கற்றுக்கொள்ள உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்.

விளக்கம்

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்திடுங்கள். உங்கள் சிறு குழந்தை வளர்ந்து வருகிறது, விரைவிலேயே உங்கள் குழந்தை மழலை மொழியினை பேச ஆரம்பித்துவிடுவார்கள். 12 மாதங்கள் முதல் 18 மாதங்களில் உங்கள் குழந்தையால் இரண்டு மூன்று சொற்களை தான் பேச முடியும். பொதுவாக குழந்தை முதன் முதலில் ‘அம்மா’ அல்லது ‘அப்பா’ என்ற வார்த்தைகளையே பேச ஆரம்பிப்பர். அதனைக் கேட்பதற்கு நீங்கள் மிகவும்ஆர்வத்துடன் உற்சாகமாகவும் இருப்பீர்கள் .