உங்கள் குழந்தையின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உங்கள் குழந்தையின் திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழி - உங்கள் குழந்தையின் பேச்சு மற்றும் மொழி திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விளக்கம்

உங்கள் குழந்தை 18 மாதங்களுக்குள் எந்த மொழியிலேனும் புதிய சொற்களைக் கற்றுக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் வாக்கியங்களை உருவாக்குவதற்கான ஊக்குவிப்பினை நீங்களும் அளிக்கவேண்டும். விரைவில், நீங்களும் உங்கள் குழந்தையும் ஒன்றாக நீண்ட உரையாடல்களை அனுபவித்து மகிழலாம், இவ்வாறான செயற்பாடுகள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துகிறது.

உங்கள் குழந்தைகளால 22-24 மாதங்களுக்குள் 50 சொற்களைப் பயன்படுத்தவோ, எளிய வாக்கியங்களை உருவாக்கவோ மற்றும் எளிய தாளங்களில் பாடவோ முடியும். (உச்சரிப்புகள் குழப்பமாக இருக்கலாம்).

எனவே நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.