கரண்டி ஒன்றின் உதவியுடன் கற்றுக்கொள்ளல்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

கரண்டி ஒன்றின் உதவியுடன் கற்றுக்கொள்ளல். தனக்கு தேவையான அளவு உணவை சுயமாக தீர்மானிக்க உங்கள் பிள்ளைக்கு பயிற்சி அளியுங்கள்.

விளக்கம்

இப்போது உங்கள் பிள்ளை திடமான உணவை உண்பதால், அவர்கள் தாங்களாகவே சாப்பிட விரும்புவார்கள். அவர்களின்  வாயிற்குள் செல்லும் உணவின் அளவை விட ஏனைய பாகங்களில் அதிகமான உணவுகள் ஒட்டிக் கொண்டிருப்பதை காண முடியும். நீங்கள் சிரமமான நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

உங்கள் குழந்தை 2 வயதை நெருங்குகையில் அவர்களுக்கு ஒரு கரண்டியால் உணவளிக்க கற்றுக்கொடுக்க முடியும். அப்போதும் அவர்களால் சரியாக உண்ண முடியாமல் அங்குமிங்கும் உணவை கொட்டியே உண்பார்கள்.