பகிர்தலின் மூலம் அன்பினை வெளிப்படுத்தல்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

பகிர்தலின் மூலம் அன்பினை வெளிப்படுத்தல் - உங்கள் பிள்ளைகள் தங்களது உடமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்களின் சமூக திறன்களை மேம்படுத்தவும் ஊக்குவியுங்கள்.

விளக்கம்

தற்போது உங்கள் பிள்ளைகள் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியுள்ளார்கள். அவர்கள் புதிய செயல்முறைகளைக் கற்கவும் புதிய நண்பர்களை உருவாக்கவும் தொடங்குவார்கள். இந்த வயதில், அவர்கள் தங்கள் பொம்மைகளைப் பகிர்ந்துக் கொள்ளவும் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கும் கற்றுக்கொள்வார்கள்.

30 - 36 மாதங்களில், உங்கள் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பரீட்சயமான  விளையாட்டுப் பொருட்களான, பொம்மைகள், பில்டிங் புளோக்ஸ்(டீரடனைiபெ டீடழஉமள) போன்றவற்றை உள்ளடக்கியதாக அவ்விளையாட்டுக்கள் அமையும்.