குழந்தை நட்சத்திர விளையாட்டு

வளர்ச்சி பகுதிகள்

அறிவுவிருத்தி சார்ந்த செயற்பாட்டு திறன

குறிக்கோள்

குழந்தை நட்சத்திர விளையாட்டு - பெரியவர்கள் செய்யும் வெவ்வேறு தொழில்களை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுத்து அவர்களின் படைப்பு சிந்தனைத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

விளக்கம்

உங்கள் குழந்தைகள் ஓர் ஆர்வமுள்ள சிந்தனையாளர்களாவர். அதீத கற்பனைத்திறனுடன் கூடிய அவர்கள் வளர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதோடு ஒவ்வொரு கணமும் புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் திறனை பெற்றுக்கொள்வார்கள். 

இந்த வயதில், அவர்களால் வெவ்வேறு தொழில்களை புரிந்துக் கொண்டு  அதனை தாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஏற்று நடிக்க  விரும்புவார்கள். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நடிகராகவோ அல்லது எதிர்கால தலைவராகவோ இருக்கலாம்!

30 முதல் 36 மாதங்களுக்கு இடையில் உங்கள் பிள்ளைகள், விளையாட்டின் போது ஆசிரியர், பைலட், மருத்துவர் போன்ற கதாபாத்திரங்களை வகிக்க விரும்புவார்கள்.