உதவி செய்யக் கற்றுக்கொடுத்தல்

வளர்ச்சி பகுதிகள்

நுட்பமான செயற்பாட்டு திறன், சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

உதவி செய்யக் கற்றுக்கொடுத்தல் - கை வலிமை அதிகரித்தல்இ ஒருங்கிணைப்பை விருத்தி செய்தல்இ புதிய உணர்திறன் அனுபவங்களை கற்பியுங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளை தினமும் ஒவ்வொரு விடயங்களை கற்றுக்கொள்வார்கள். தினசரி நீங்கள் செய்யும் பணிகளை உற்று கவனிக்கும் உங்கள் பிள்ளைகள், அவற்றை தாங்களும் செய்து பார்ப்பதில் அதிக முயற்சி எடுப்பார்கள். 

30 - 36 மாதங்களில் உங்கள் பிள்ளைகள் எளிய வீட்டு வேலைகளில் ‘உதவி’ செய்ய விரும்புவார்கள்.