சுத்தமாக இருங்கள், ஆரோக்கியத்தை பேணுங்கள்!

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

சுத்தமாக இருங்கள், ஆரோக்கியத்தை பேணுங்கள்! - தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள்.

விளக்கம்

உங்கள் பிள்ளை நாள் முழுவதும் அவர்களின் குறும்புதனங்களையும் சாகசங்களையும் தொடர்ந்து கொண்டிருப்பதால், தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியமாகும். அவர்கள் எங்கேங்கே தங்கள் கைகளை வைத்தார்கள் என்பதை உங்களால் எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. 

ஆகவே குறிப்பாக சாப்பிடுவதற்கு முன்பும் கழிப்பறைக்குச் சென்ற பின்னரும் கைகளை நன்றாக கழுவ கற்றுக்கொடுங்கள். 24 - 30 மாதங்களுக்கு இடையில், உங்கள் பிள்ளைகள் தாங்களாகவே தங்கள் கைகளை கழுவி, உலர வைக்கவும் பழக்குங்கள்.