நட்பு வலயத்தை கண்டறிதல்

வளர்ச்சி பகுதிகள்

சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

நட்பு வலயத்தை கண்டறிதல் - உங்கள் குழந்தையின் சமூக திறன்களையும் தொடர்புகளையும் பலப்படுத்துதல்.

விளக்கம்

சிறந்த பிணைப்புகளை உருவாக்குவதற்கான நேரம் இது. உங்கள் பிள்ளைகள் இவ்வயதில் முன்பள்ளி (pre-school ) அல்லது பாலர் பாடசாலை( montessori)சென்று கொண்டிருக்கலாம்.

அவர்கள், தங்கள் வயதை ஒத்த ஏனைய குழந்தைகளுடன் விளையாடுவதைப் பழக்கப்படுத்திக்கொள்வார்கள் , மேலும் அவர்கள் அவ்வாறு செய்ய இதுவே சரியான நேரம், ஏனெனில் “பாடசாலை” தொடங்குவதற்கு இன்னும் சில காலமே இருக்கும்.!

42 - 48 மாதங்களுக்குள் உங்கள் பிள்ளைகள் ஏனைய குழந்தைகளுடன் சிறிய மோதல் மற்றும் குறைந்தபட்ச மேற்பார்வையுடன் நன்றாக விளையாட ஆரம்பிப்பார்கள்.