இதயத்திற்கு இதமான சொற்களை பேசக் கற்றுக்கொடுத்தல்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

இதயத்திற்கு இதமான சொற்களை பேசக் கற்றுக்கொடுத்தல் - உங்கள் குழந்தையின் பேசும் திறனை வளர்த்தல் மற்றும் அவர்களின் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்தல்

விளக்கம்

உங்கள் பிள்ளைகள் கேட்பதன் மூலமும், மற்றவர்கள் அவர்களுடன் பேசுவதையும், அடிப்படையாக கொண்டு பேச கற்றுக்கொள்கின்றனர். முக்கியமாக அவர்களுடன் தொடர்ந்து பேசுவதன் மூலம் நன்றாக பேசுவதற்கு கற்றுக்கொள்கிறார்கள்.

உங்கள் குழந்தை அற்புதமான 4 வயதை நெருங்குகையில், அவர்களால் உங்களுடன் சுவாரஸ்யமான உரையாடல்களை மேற்கொள்ள முடியும்!

இவ்வயதில் அவர்கள் ஒவ்வொரு விடயங்கள் குறித்தும் தங்கள் சொந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள்.

42 - 48 மாத வயதில் ‘மற்றும்’, ‘அல்லது’, ‘ஆனால்’ (~4வயது) போன்ற சொற்களுடன் உங்கள் பிள்ளையால் வாக்கியங்களை இணைக்க முடியும்.