பரந்த எல்லைகள்

வளர்ச்சி பகுதிகள்

பேச்சு மற்றும் மொழி சார்ந்த செயற்பாட்டு திறன், சமூக ஈடுபாடு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த செயற்பாட்டு திறன்

குறிக்கோள்

பரந்த எல்லைகள் - உங்கள் குழந்தையின் படைப்பு சிந்தனையை ஊக்குவித்தல், அவர்களின் கற்பனையை விரிவுப்படுத்தல்.

விளக்கம்

உங்கள் கைகளில் தூங்கியது முதல் தங்களை அலங்கரிப்பது வரை, ஓடுவது வரை என உங்கள் பிள்ளை பல ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆரம்பகாலத்தில் அவர்கள் “கா கா கா” என கூறிய மழலை மொழி சொல்லும் நாட்களை நீங்கள் தற்போது அன்புடன் மீட்டுப் பார்ப்பீர்கள். இப்போது அவர்கள் முன்பள்ளிக்குச் செல்லும்போது அவர்களின் சொல்லகராதி மற்றும் பேசும் திறன் மிகவும் மேம்பட்டிருக்கும். மேலும் அவர்கள் இடைவிடாது பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் 

54 - 60 மாதங்களுக்குள், உங்கள் பிள்ளையால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களால் சேர்ந்த வாக்கியங்களை தனது பேச்சில் கொண்டிருப்பார்கள்.