Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

புதிய உடன்பிறப்பின் வருகையினால் ஏறபடும் மாற்றங்கள் மற்றும் அதனை சரி செய்தல்

Dinusha Manjarie Wickremesekera

நீங்கள் உங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ந்திருந்த வேளையை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இருவராக இருந்த உங்களின் குடும்ப நிலையினை மூவராக மாற்றி ஒரு மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்திய அற்புதமான செய்தி. புதிய வரவு உங்களுக்குள்ளும் உங்கள் வீட்டினுள்ளும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. உங்களின் புதிய அங்கத்தவருக்கு அதிகளவான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் கவனம் தேவைப்பட்டது.

 

உங்களின் உறக்க முறையில் யாருடைய தேவைக்கு முன்னுரிமை  வழங்கல் உங்கள் உறவுகளின் தன்மை என்பன மாற்றத்திற்கு உட்பட்ட விடயங்களாக மாறின. ஒரு குழந்தையுடன் வரும் ஏராளமான மகிழ்ச்சியுடன் விரக்தி தொடக்கம் கோபம் வரை நாம் பலவிதமான உணர்ச்சிகளை அனுபவித்த பெரியவர்களாக நாம் இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டோம்.

 

உங்கள் இரண்டாவது பிள்ளையின் வருகை

நீங்கள் இப்போது உங்கள் இரண்டாவது பிள்ளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் குடும்ப அலகு மீண்டும் மாற்றத்திற்கு உட்படுகின்றது. இம்முறை உங்களுக்கோர் இளம் பிள்ளை இருக்கின்றார் .தனது புதிய உடன்பிறப்பின் தேவைகளையும்  தற்போது  மாறிவரும் தொடர்புகள் உறவுமுறைகளையும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாதவராகவும் அவர் இருப்பதுடன் பராமரிப்பு முழுமையாக தேவைப்படும் புதிய குழந்தையுடன் கவனமானது பகிரப்படுகின்றது.

இதற்கான உங்கள் முதல் குழந்தையின் செயற்பாடுகள் அவர்களின் வயதிற்கேற்ப மாறுப்படலாம். இதை நாம் அவர்களின் வளர்ச்சிக் கட்டத்துடன் இணைக்க முடியும். மேலும் குழந்தையால் தனது வீட்டினுள் நிகழும் மாற்றத்தை எந்நதளவிற்கு புரிந்துக்கொள்ள முடிகிறது என்பதை அறியலாம். உங்களின் முதல் குழந்தை 4 வயதிற்கு குறைந்தவராக இருந்தால் பொறமைப்படல் மற்றும் சண்டித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடல் போன்ற சில நடத்தைகளை எதிர்பார்க்கலாம். இது மிகவம் சாதாரணமான விடயம். உங்களின் குழந்தைக்கு 4 வயதாயின் புதிய குழந்தையின் தேவைகளை நன்கு புரிந்துக்கொள்ளக் கூடியவராக இருக்கலாம். எவ்வாறாக இருப்பினும் அவர்கள் மீதான கவனம் குறையும் போது தற்போதும் கூட பொறாமைப்படுவதற்கான வாய்ப்பபுகள் உள்ளன.

 

இச்சிக்கலான வயதில் பிறப்பு முதல் ஐந்து வயது தொடக்கம் குழந்தைகள் அவர்களது உறவகளில் தங்களது பாதுகாப்பு உணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள் அத்தோடு பெற்றோரின் உறவுமுறை அதற்கு அடித்தளமாக உள்ளது. சிறு வயதில் சகல நடத்தைகளும் குறித்து நிற்பது தேவைகளின் வெளிப்பாடே. மாறிவரும் தேவைகள் வெளிப்படுததலுக்கான ஆற்றல் புரிந்துக்கொள்ளல் மற்றும் பொறுப்புக்களை ஏற்றல் போன்றவற்றையும் வயது குறித்து நிற்கின்றது.

 

இரண்டு வருடகால இடைவெளி

பெற்றோர்களின் கவனம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கவனம் நண்பர்களின் கவனம் என்பன பகிரப்படும் போது பொறமை உணர்வு ஏற்படுவது இயல்பு. இத்தருணங்களில் சண்டித்தனமான செய்றபாடுகள் அதிகரித்தல் சிறு பிள்ளையின் நடத்தைகளில் குழந்தை கதை தவழ்தல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நடத்தைகளை அவதானிக்கலாம். சில நேரங்களில் நடத்தையின் வெளிப்பாடு அமைதியாக கூட இருக்கலாம். குழந்தையை ஏற்றுக்கொள்வதற்கான எதிர்ப்பினையும் உங்களால் அவதானிக்க முடியும்.

 

அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. உங்களிடமிருந்தான பாதுகாப்பான அரவணைப்பு எல்லாவற்றையும் சரி செய்தவிடும். நன்னடத்தைகளை பாராட்டுங்கள் .இந்நேரங்களில் உங்களின் அரவணைப்பு பாதுகாப்பு உணர்வை வழங்கிடும்.

எந்நேரமும் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளல்- இன்னும் அவர்களுக்கு தெரியாது அவர்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என. “ மூத்த பிள்ளையாக இருப்பது கடினம் நீங்கள் கோபமாகவோ கவலையாகவோ உணரலாம். என்பதை நீங்கள் கூறலாம். ஆகவே பாதுகாப்புடன் ஓர் ஆதரவினை வழங்குங்கள். அவர்கள் எந்நேரமும் அன்புக்குரியவர்கள் என்பதை உணரும் விதமாக அவர்களை அரவணையுங்கள்.

நல்ல நடத்தைகளை ஏற்றுக்கொண்டு அவர்களை பாராட்டுவதன் மூலம் வலுப்படுத்துங்கள்.

 

உஙகளின் மூத்த பிள்ளையுடன் விளையாடுவதற்கு வாசிப்பதற்கு கதைப்பதற்கும் நேரத்தினை ஒதுக்கிடுங்கள்.

 

3 தொடக்கம் 5 வருடகால வயது இடைவெளி

 

உங்களின் மூத்த பிள்ளை மூன்று மற்றும் நான்கு வயதுக்கு இடைப்பட்டவர்களாயின் நன்கு புரிந்துணர்வு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு தெளிவுப்படுத்தவது இலகுவாக அமையும். ஆனாலும் அவர்கள் மேலும் சில செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடும் -தம்பிஃதங்கையை மீண்டும்  வைத்தியசாலையில் விடச் சொல்லி கூறுவார்கள் .அல்லது குழந்தையை உங்களையே அடிக்கச் சொல்வார்கள். பின்னடைவுகளும் எற்றபடலாம். சண்டித்தனமாக கூட் நடக்கலாம். – தான் பெற்ற அனைத்து நன்மைகளும் குறையும்பட்சத்திலும் தனது அந்தஸ்தினை இழந்த நிலையிலும் பொறமையின் வெளிப்பாடாக நிறைய தருணங்களில் இது இயல்பான விடயமாகும்.

 

-அவர்களுக்கு வெளியில் நண்பர்கள் இருந்தால் அவர்களுடன் விளையாட நேரத்தினை அமைத்துக்கொடுக்கலாம்.

-குழந்தையை பராமரிக்கும் பணிகளில் உங்களுடன் உதவிகள் செய்யுமாறு அவர்களை கேட்கலாம்.

-குழந்தை பிறப்பதற்கு முன்பே குழந்தை வருவதை பற்றிய கதைகளை கூறி தயார்ப்படுத்தவது ஒரு சிறந்த வழியாகும்.

 

மாறுபாடான நடத்தைகள் தொடர்தல்

 

உங்களின் பிள்ளை புதிய உடன்பிறப்பை நோக்கி அதிக ஆக்ரோஷமாக இருந்தால் மேலுள்ள உத்திகள் பயனளிக்கும் .

இங்கு நீங்கள் அன்பு கலந்த எல்லைகளை நிறுவுதல் வேண்டும்.; -

நான் குழந்தையை அடிக்க விட மாட்டேன்என்று நீங்கள் அமைதியாகவும் உறுதியாகவும் ஒரு எல்லைகளை நிறுவ முயற்சிக்கிறீர்கள்

வரைதல் க்ளே (clay) போன்றவற்றுடன் விளையாடுதல் போன்று உங்கள் பிள்ளை கோபத்தை வெளிப்படுத்தக் கூடிய வேறு வழிகளை கண்டுபிடியுங்கள்.

 

குறிப்பு: மூத்த பிள்ளை புதிய உடன்பிறப்பை நோக்கி பொறமையினை வெளிப்படுத்துவது சாதாரணமான விடயமாகும். பெற்றோர்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதிலேயே குடும்பத்தின் உறவுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஆழ்ந்த மூச்சை எடுங்கள்- இளைய பிள்ளையை நோக்கி மூத்த பிள்ளையின் செயற்பாடுகள் கவலை அன்பு என மேலும் பல உணர்ச்சிகள் கலந்த கலவையாகும். புதிய உடன் பிறப்பை எதிர்கொள்ளும் போது  இவை இயல்பானவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

Recommended Articles