Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

சமூக இடைவெளியின் போதான சமூக ரீதியான அழுத்தத்தினை சமாளித்தல்

Dinusha Manjarie Wickremesekera

சுமார் ஒருவருட காலமாக , நமக்கு நெருக்கமான அருகாமையில்  உள்ள எவரிடமிருந்தேனும் கொவிட்19 நோய்த் தொற்றானது நமக்கும் தொற்றிவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கின்றோம் . நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அறிகுறிகளைக்கொண்டவர்கள் பற்றிய செய்திகள் நிரம்பிவழிகின்றன .

 

நாம் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்த யாரோ நமது உடல் வெப்பநிலையினை பரிசோதித்துக்கொண்டிருக்கின்றார்கள் . உங்கள் மொபைல் போன் அல்லது  சாவியைப்போலவே நீங்கள் தவறாமல்  எடுத்துச்செல்லும்  விடயங்களில்  முகக்கவசமும்  ஒன்று என்கிற பழக்கத்திற்கு தற்போது நீங்கள் வந்திருக்கலாம்  . சுற்றியிருப்பவர்கள் முகக்கவசத்தினை அணிந்திருக்கிறார்களா அல்லது அணியாமல் இருக்கின்றார்களா என்பதை நீங்கள் கவனிக்கத் தவறுவதில்லை  . ஒரு இருமல் அல்லது தொண்டை கரகரத்தல் கூட அச்சச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கலாம் .                       

எங்களுடைய பயமானது எங்களுடைய குழந்தைகளாலும் உள்வாங்கப்படுகின்றது . நம்மைப்போல் அவர்களால் சரியாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம் . நிறைய விடயங்கள் மாறிவிட்டன என்பதை அவர்கள் அறிவார்கள். தற்போதெல்லாம் அவர்கள்  உங்களை வீட்டில் அதிகமாக காண்கிறார்கள் , அல்லது அவர்கள் பாலர் பாடசாலை செல்லும் வயதில் இருப்பவர்களாயின்; நீண்டகாலமாக பாடசாலைக்கு செல்வதற்கான வாய்ப்பிருக்கவில்லை   . அத்தோடு அவர்கள்ஏன் எனைய குடும்ப உறுப்பினர்களையோ நண்பர்களையோ பார்க்கமுடியவில்லை? என யோசித்துக்கொண்டிருக்கலாம்  .

ஏறக்குறைய ஒரு வருடகாலமாக  இப்படியே வாழ்ந்துவிட்டோம், சமூக இடைவெளி தொடர்பாக நாம்  குறிப்பிட்ட ஓர் எல்லையை வைத்துளளோம்நீங்கள் வெளியே காலடி எடுத்துவைக்கும்போது யாரேனும் ஒருவர் அருகில் வருவாராயின்  இன்னுமே ஒருவித நடுக்கத்தை உணர்வீர்கள்மார்ச் 2020 இல் ஏற்பட்ட நீண்டகால முடக்கல் நிலை மற்றும் இரண்டாவது முடக்கல் மூலம் இந்த அழுத்தமும்  பயமும் நீண்ட காலமாக நீடித்தது. இப் புதிய யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டு முகக்கவசத்துடன் , மீட்டெழுச்சி மற்றும் நெகிழ்வுத்திறன் மிக முக்கியமாக நம்மையும் மற்றவர்களையும் இரக்கத்துடன் வழிநடாத்தும் பண்புகளுடன் பயணப்பட வேண்டும்.

 

நாம் எதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை புரிந்துக்கொள் வேண்டும். இந்த புதிய யதார்தத்தினை சமாளிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை ஆராய்ந்து உணர்ந்துக்கொள்ள வேண்டும் .நாம் சமாளித்துக்கொண்டிருக்கின்றோம் . இத்தனைக் காலமும் சமாளித்து வருகிறோம். இனி நாம் முன்னேற வேண்டிய நேரமிது .

 

 

இந்த முடக்கல் நிலை  நிறைய சவால்களைக்  கொண்டு வந்திருந்தாலும்அதில்   நிறைய ஆசிர்வதிக்கப்பட்ட நல்ல விடயங்களும் மறைந்துள்ளன  என்றே கூறவேண்டும்  .  பெற்றோர்கள் தங்கள் குழந்தை அல்லது  குழந்தைகளுடன் நீண்ட காலத்திற்கு வீட்டில் ஒன்றாக இருக்கவும் , தங்கள் குழந்தை அல்லது குழந்தைகளைப் பற்றி தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும்  உதவியது. வேலை மற்றும் வீடு என இரண்டிற்கும் இடையே ஒருவித சமநிலையினை பேண உதவியதெனலாம் .   பாடசாலைகள் ஒன்;லைனில் நடப்பதால் பெற்றோர்கள் தாமும் ஓர் ஆசிரியரைப்போன்று மேற்பார்வையாளர்களாக இருக்கும்  வாய்ப்பும் உருவாகியது

 

இதில் மறைந்திருந்த  உங்களுக்கான ஆசீர்வாதங்கள் என்னென்ன  ?  நீங்கள் எத்தனை கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது ? இந்த முடக்கல்  மூலம் உங்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன ? இக்காலகட்டத்தில் உங்களது தொடர்பாடல்  எப்படியானது , அது தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ , எவ்வாறாக இருந்தாலும் சரி  , உங்கள் பிணைப்புக்களின்  தரம் எப்படி இருந்தது? சகல எண்ணங்களிலும் முதன்மையாக தெரிந்த பய உணர்வினை விரட்டி அடிக்க உங்களுக்கு உதவியது எது?

 

 

இந்த பயத்திலிருந்து விடுபட என்னவிதமான யுக்தியை பயன்படுத்தினீர்கள்? எவ்வாறு உங்களை பழக்கப்படுத்தி முன்னேற கற்றுக்கொண்டீர்கள்?

 

நம்முடைய எண்ணவோட்டங்களினதும் சிந்தனையினதும் பிரதிபலிப்பாக நமது செயற்பாடுகள் அமைகிறது .

இந்த விடயங்களை  எப்படி உள்வாங்கிக்கொள்வதென உங்கள் குழந்தைகளுடன்  எவ்வாறு பேசினீர்கள் ? முடக்கல் நிலை மூலம் உங்களுக்கேற்பட்ட அனுபவங்களை எங்களுடன் கருத்துக்களாக பகிர்ந்துகொள்ளுங்கள் .

 

மேலும் , உங்களுக்கும்  இதிலிருந்து மீள உதவிய உங்களை சுற்றியுள்ள அத்தனைபேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள இத்தருணத்தில் மறந்துவிடாதீர்கள் .

 

 

உதவிக்குறிப்பு :

கொவிட்19 தொற்று மற்றும் முடக்கல் நிலையில் இருந்து வெளியேறுவதற்கு என்னவிதமான யுக்திகளை நீங்கள் கையாண்டீர்கள் என்பதை கருத்துப்பகுதியில் பதிவிடுவதுடன் மற்றவர்கள் எவ்வாறு இந்த சவாலினை  எதிர்கொண்டார்கள் என்பதனையும் அறிந்துகொள்ளுங்கள் .

Recommended Articles