Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உங்கள் குழந்தையுடன் நீங்கள் பேசும்போதும் விளையாடும்போதும், அவர்களது மூளைக்குள், தகவல்களைச் செயலாக்கும் திறன், உணர்தல் திறன், மொழியினை கற்றல் மற்றும் கருத்தியல் சிந்தனை ஆகியவை வளர்ச்சி அடையும்.

நடப்பது, பேசுவது, பிடிப்பது, தமக்குத் தாமே உணவளிப்பது திறன்களையும் மற்றும் பெரியவர்களாக நாம் அங்கீகரிக்கும் ஏனைய பல திறன்களிலும் மைல்கல்களை அடையும் போது நாம் எங்களது பிள்ளைகளை அவதானிக்கின்றோம்மைல்கற்கள் என்பது நடத்தைகள் மற்றும் அல்லது குழந்தைகள் வளரும்போது கற்றுக் கொள்ளும் உடற்; திறன்கள ஆகும்;. இவை இரண்டும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தாலும் வளர்ச்சியின் போது உடல் மற்றும் மன அம்சங்களுக்கும் மைல்கற்களாக தீர்மானிக்கப்படுகின்றன.

 

வளர்ச்சி மைல்கற்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயதுடன் இணைக்கப்படுகின்றன: எடுத்துக்காட்டாக, ஒரு குறுநடை போடும் 1 முதல் 3 வயது வரை உள்ள பிள்ளை அதிகமாக கொட்டாமல் தமது உணவினை தாமாகவே உட்கொள்ள முயற்சிப்பர் , ஒரு கோடு வரைய முடியும், பொதுவான பொருள்களின் பெயர்களை கூறல் உடல் உறுப்புகளை சரியாக பெயரிடல், நிறங்களை அடையாளம் கண்டு பெயரிடுதல், குறிப்பிட்ட பொருள்கள் மற்றும் பல நடத்தைகள் மற்றும் திறன்களைக் கண்டறிதல். இவை அனைத்தும் உங்கள் குழந்தை தானே செய்யத் தொடங்கும் செயல்முறையைக் குறிக்கிறது. இந்த சுதந்திரத்தை வளர்ப்பது, மேலும் ஏலபழவளமல உயடடள சுய மதிப்பீடு மற்றும் விரிவாற்றலை ஆதரிக்கும் எங்களின் உள் உரையாடல் பெற்றோரின் முக்கிய அம்சங்களாகும், மேலும் இது உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவினை பிரதிபலிக்கும்.

வழங்கப்;பட்ட காலவரிசைக்கு ஏற்ப மைல்கற்களை அடைவது, வளர்ச்சியின் இயல்பான முன்னேற்றத்தின் அறிகுறியாகக் காணப்படுகிறது. பொதுவாக, சிலர் மைல்கற்களை சரியான நேரத்தில் அடைவார்கள், சிலர் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ இருப்பார்கள். சில குழந்தைகள் 8 மாதங்களில் நடப்பார்கள், சிலருக்கு 13 மாதங்கள் ஆகும்சில விடயஙகளில் பிள்ளைகள் விரைவாக இருக்கின்றனர் சிலர் வழரைவாக நடக்கின்றனர் ஏனைய சில விடயங்களில் மெதுவாக இருக்கின்றனர் என்கின்றது சில எடுத்துக்காட்டுக்கள் ஆனாலும் இது பரவாயில்லை என்பதே கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விடயம் ஆகும்.- உதாரணமாக ஒரு குறுநடை போடும் குழந்தை எதிர்பார்த்த வயதிற்கு முன்பே நன்றாக பேச முடியும், ஆனால் நடை எதிர்பார்த்த வயதை விட சிறிது தாமதமாகலாம். இருப்பினும், குறிப்பிடத்தக்க தாமதங்கள் இருந்தால், நிபுணரகளின் கருத்து மற்றும் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வளர்ச்சியில் கணிசமான அளவு தாமதங்களை முன்கூட்டியே கண்டறிதல் அதனை தீர்ப்பதற்கு மிகவும் எளிதாக அமையும்.

உண்மையான அறிவாற்றல் மைல்கற்கள் அல்லது சிந்தனை செயல்முறையின் வளர்ச்சிக்கு நாம் செல்வதற்கு முன், ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கண்டறிந்த இரண்டு விடயங்களை நான் கூற விரும்புகிறேன்:

1. நமது மன வளர்ச்சி கோபம், பதட்டம் போன்ற பல்வேறு வகையான விரோதங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் மற்றவர்களின் உளமறிந்து செயற்படல் அனுபவமிக்க விரோதங்களின் எண்ணிக்கைகளால் வளர்க்கப்படுகிறது.

2. மக்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புகொள்வதன் மூலம் சிந்திக்கும் திறன் மேம்படும். - வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆரம்பகால அனுபவங்கள் முக்கியம் - வளர்ப்பு அனுபவங்கள் உலகைப் புரிந்துகொள்ள உதவுகின்றன - நமது மூளையின் கட்டமைப்பை வளர்க்கின்றன.

 

நீங்கள் கவனிக்கத் தொடங்கும் முதல் நடத்தைகளில், உங்கள் குழந்தை முகங்களை எவ்வாறு கவனிக்கிறது, சிறிது நேரத்திற்குப் பிறகு விஷயங்கள் மாறவில்லை என்றால் அவர்கள் எப்படி சலிப்படைகிறார்கள் என்பதை கவனிப்பீர்கள். வெவ்வேறு விடயங்களைப் பார்க்க அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை இது நமக்குச் சொல்கிறது. அதே நேரத்தில், அவர்கள் விருப்பமான விடயங்களில் இணைப்புகளை உருவாக்குவதையும், அதைத் தொடர்ந்து செய்வதையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

 

ஒரு வருடத்திற்குள், உங்கள் குறுநடை போடும் குழந்தை தன்னைச் சுற்றியுள்ள விடயங்களை ஆராயும் விதம் , அவர்கள் குலுக்கி, இடித்து அத்தோடு பொருட்களை தூக்கி எறிவார்கள், மேலும் அவர்களால் விஷயங்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும், சைகைகளை நகலெடுத்து, சரியாகப் பயன்படுத்தத் தொடங்குவார்கள் உதாரணமாக கோப்பையில் பருகுவதற்கும் தனது தலைமுடியினை சீவிக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விதங்களில் அவர்கள் மாற்றமடைவதை நீங்கள் அவதானிக்க முடியும். இரண்டு வயதாகும் போது வடிவங்கள் மற்றும் நிறங்களை அறிந்துக்கொள்வார்கள் அத்தோடு பழக்கப்பட்ட புத்தகங்களில் உள்ள வாக்கியங்களை முழுமையாக கூறுவார்கள். அத்தோடு கேம்களை விளையாடுவதில் ஆர்வம் மற்றும் ஒரே தடவையில் இரண்டு அறிவுறுத்தல்களை பின்பற்றுவார்கள்.

 

 

                நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்த இதனை எவ்வாறு பயன்படுத்தலாம்?

1. விளையாட்டு - தூண்டுதலுக்கான சிறந்த வழிமுறைகள் - புதிய அனுபவங்கள், சமூக தொடர்பு மற்றும் வேடிக்கையானது - அற்புதமான உலகங்களை உருவாக்க நீங்கள் அன்றாட பொருட்களைப் பயன்படுத்தலாம்

2. பிள்ளைகளுக்கு தேர்வுகளை வழங்குதல் - அவர்கள் முடிவெடுப்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்க உதவுதல்

3. பிள்ளைகளுக்கு பல்வேறுப்பட்ட அனுபவங்கள் இருப்பதை உறுதிசெய்து, உங்களுடன் மிகவும் சுவாரசியமான உரையாடல்களை நடத்தும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக அதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.

சிக்கலைத் தீர்ப்பதற்கும் சுதந்திரம் பெறுவதற்கும், குழந்தைக்கு ஏதாவது கற்றுக்கொள்வதற்கு உங்களின் ஆதரவினை வழங்கவும், மேலும் அவர்கள் முன்னேற்றம் அடையும் போது, உங்களின் ஆதரவினை படிப்படியாக குறைத்து அவர்கள் தங்களது சொந்த நேரத்தில் தாமாகவே அதிகமாகச் செய்ய அனுமதித்தல் சிறப்பாகும்.

 

உதவிக்குறிப்பு: அறிவாற்றல் வளர்ச்சி என்பது செயல்முறையை புரிந்துக்கொள்ளுதல் மற்றும் விடயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் கணித்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளதுஎனவே நாம் கைதட்டினால் ஒரு ஒலி உருவாகும் என்பது நமக்குத் தெரியும். இதை நாங்கள் செய்தல் விளையாடுதல் மற்றும் பிணைப்புக்கள் மூலம் கற்றுக்கொண்டோம். மேலும் வாசித்து, உங்கள் குழந்தையின் மன வளர்ச்சியை எவ்வாறு விருத்தி  செய்யலாம் என்பதைக் கண்டறியுங்கள்.

Recommended Articles