உங்களின் செயல்கள் மூலம் நற்பழக்க வழக்கங்களைக் கற்பித்துக் கொடுத்தல்.

உங்கள் குழந்தை இந்த வயதில் ஒருவர் செய்வதை பிரதிபலிப்பதில் (சாயல்) அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதன் மூலம் அவர்கள் முற்றிலும் ஈர்க்கப்படுவார்கள். எனவே, உங்கள் குழந்தைக்கு ஒரு புதிய திறன்களைக் கற்பிக்க இதனை சரியானதோர் வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.

இந்த உண்மையை உணர்ந்து, ஒரு எடுத்துக் காட்டான பெற்றோராக இருப்பதன் மூலம், அவர்களுக்கு சிறந்த பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் கற்றுக்கொடுக்க முடியும். உதாரணமாக, அவர்கள் பொம்மைகளுடன் விளையாடி முடித்தவுடன், பொம்மைகளை மீண்டும் அவை இருந்த பெட்டியில் அல்லது கூடையில் வைக்குமாறு அவர்களிடம் கேட்கலாம்.




*Parents are required to accompany their children throughout the activities