தாளத்துக்கேற்ற நடனம்

தாளத்துக்கேற்ற நடனம் ஒன்றாக உட்கார்ந்து பேசுவது அல்லது ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றவை உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்கான வழியாகும். ஆனால் குழந்தைகள் அசைவுகளை வெளிப்படுத்தவும் , நடனமாடவும், குதித்து ஓடவும் விரும்புகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த அத்தியாவசிய திறன்களை செம்மைப்படுத்தும் போது, அவர்களுடன் இணைந்துகொள்வதற்கு இதுவே சரியான வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்களின் திறன்களையும் மெருகேற்ற முடியும்.

படிமுறை 1: உற்சாகமான தாளத்துடன் கூடிய குழந்தைகளின் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள்.

படிமுறை 2: உங்கள் குழந்தையுடன் நடனமாடுங்கள், நீங்கள் செய்யும் அசைவுகளை அவர்களால் பின்பற்ற முடியுமா எனப் பாருங்கள்.

படிமுறை 3: இச்செயல்பாட்டில், அவர்களின் சமநிலையை பேணவும், ஒரு நிலையில் நிற்கவும் முயற்சிக்க அனுமதியுங்கள்.

படிமுறை 4: பின்னர் படிப்படியாக, உங்கள் குறுநடை போடும் குழந்தையை குதிக்கவும் இசையின் தாளத்திற்கு கைதட்டவும் ஊக்குவியுங்கள்.




*Parents are required to accompany their children throughout the activities