parent’s-role-child’s-learning

தற்போதைய காலப்பகுதியில் குழந்தைகளின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர்களின் பங்கு பகுதி 1

Expert Stories | Nimali Priyadarshani Certified Life Coach, Lecturer in Early childhood Founder of ZOE - The center for Training and Consultancy

கல்வித்துறையில் விவாதிக்கப்படும் பொதுவான தலைப்புகளில் ஒன்றாககுழந்தைகளின் கற்றலில் பெற்றோரின் பங்குஎன்பது விளங்குகின்றதுஊழுஏஐனு-19 தொற்றுநோய் பரவல் காரணமாக இணையவழி (ஆன்-லைன்) மூலமான கற்றல் செயற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இவ்விடயமானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்தகாலங்களில் பள்ளி நிர்வாகங்களும் கல்விப் பணியாளர்களும் குழந்தைகளை எவ்வகையிலான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர் ஆனால் தற்போதைய கற்றல் செயற்பாடுகளை தெளிவுபடும் பொறுப்பானது பெற்றோர்களின் மீது தங்கியுள்ளதோடு பெற்றோர்களுக்கும் இது பெரும் சவாலாக அமைகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கற்பித்தல் செயற்பாடுகளை முடிந்தவரை தெளிவுபடுத்த பெற்றோர்கள் முயன்றாலும், தற்போதைய சூழ்நிலையில் இது ஓரளவு சவாலாக பெற்றோர்களுக்கு அமந்துள்ளதுடன் ஒரு துன்பகரமான பணியாகவும் மாறிவிட்டது. ஏனைய அனுபவங்களுடன் ஒப்பிடும்போது இந்த சூழ்நிலையை திறமையாக நிர்வகிக்க முடியாதததை எண்ணி பெற்றோர்கள் தங்களைப் பற்றி எதிர்மறையாக உணரவேண்டிய அவசியமில்லை என்றாலும், ஓர் குடும்பமாக பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள இடமளிக்கும் வாய்ப்பாக இத்தருணத்தை பெற்றோர்கள் கருதிட வேண்டும் என நான் நம்புகிறேன்.

இவ்விடயத்தை வேறு கோணத்தில் எவ்வாறு அணுக முடியும்…?

ஒன்லைனில் (ழுடெiநெ) கற்றல் செயற்பாடாக இருந்தாலும் அல்லது ஓஃப்லைன் (ழுககடiநெ) கற்றல் செயற்பாடாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளின் முழுத்திறனை பெற்றுகொள்வதற்கு குறித்த செயற்பாட்டினுள் பெற்றோரின் ஈடுபாடும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையை இணையவழி கற்றல் செயற்பாடுகளை சுற்றிலும் காணப்படும் களங்கத்தை குறைத்துக் கொள்வதற்கு பெற்றோர்கள், இவ்விடயம் தொடர்பில் வேறு கோணத்தில் அணுக வேண்டியது முக்கியமாகும். இந்த புரிதலை அடைவதன் மூலமாகவே இச்செயற்பாடுகளின் உரிய மறுவடிவமைப்புகளை கொண்டு வரமுடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், தொற்றுநோய் பரவிவரும் இந்த காலப்பகுதியில் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் உங்கள் குழந்தையின் கற்றல் செயற்பாடுகளில் ஒரு பெற்றோராக நீங்கள் முதலீடு செய்யப் போகும் நேரமும் முயற்சியும், எதிர்பாராத சுமையாக ஒருபோதும் நீங்கள் கருதிடக் கூடாது

உங்கள் குழந்தையின் பள்ளி வேலையைப் பொறுத்தவரை நீங்கள் இப்போது அதிக பணிகளைச் செய்துள்ளீர்கள் என்பது பேன்ற எண்ணங்கள் தோன்றுவது இயற்கையாகும்.. ஏனென்றால், இணையவழி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உங்கள் பிள்ளைகளுக்கான ஒத்துழைப்பினை பெற்றோராகிய நீங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும் இவ்வறானதோரு நேரத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் அனைத்தும் விடயங்களும் உங்களுக்கு பெரும் புதுமையாகத் தோற்றுவிக்கலாம்ஆனால் இது உங்கள் குழந்தையை வளமாக்குவதோடு, உங்கள் குழந்தைகளின் படிப்படியான கற்றல் செயற்பாடுகளின் அடிப்படையாக விளங்கும் குழந்தைகளின் சிறப்பான திறன்களை மேலும் விருத்தியடையச் செய்யும்வளர்த்துக் கொள்ளும். எல்லாவற்றிற்கும் மேலாக, புத்தகங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியாத சில வாழ்க்கைப் பாடங்களைக் உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க இது ஒரு சிறந்த தருணமாகும்.

புதிதாக ஆரம்பிப்பதற்கு பின்வரும் குறிப்புகள் உதவியாக அமையும் ...

•             இந்த இணையவழி மூலமான கற்றல் மேற்கொள்ளப்படும் இக்காலத்தில் விதிகள் மற்றும் கொள்கைகளை அமைப்பது தொடர்பில் பெற்றோர்களுக்கு காணப்படும் அதிகாரத்தை பயன்படுத்தி உங்கள் குழந்தைகள் தங்களாகவே வீட்டுப்பாடங்கiளை முறையாக பூர்த்தி செய்வதற்கும், இணைய வழி கற்றல் செயற்பாட்டில் ஈடுவதற்கும் தெளிவாக வழிநடத்திடுங்கள். ஊரடங்கு காலப்பகுதியில் மட்டுமின்றி ஏனைய காலப்பகுதியிலும் ஒரு முறையான குடும்ப சூழ்நிலையை இதன் பொருட்டு உருவாக்கவேண்டியது அவசியமாகும்.

•             வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலமும், வீட்டுப்பாடங்களுக்கு உதவுவதன் மூலமும், ஆசிரியர்களுடன் பேசுவதன் மூலமும், கற்றலுக்கான நேர்மறையான பழக்கங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் உங்கள் குழந்தையுடன் இணைந்து செயற்படவும்.

•             உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டுமென நீங்கள் நினைத்து வைத்துள்ள நடத்தையை மாதிரியாக முன்வைக்கவும். வீட்டிலிருந்து பணிபுரியும் பெற்றோருக்கு இது எளிதாகும். ஏனெனில், அவர்கள் கவனம் செலுத்துதல், ஒழுக்கமாக இருப்பது, மேற்பார்வையின்றி கூட வேலை செய்வது, அல்லது ஒன்லைன் கூட்டங்களில் சரியான நேரத்தில் செயல்படுவது போன்ற நடத்தைகளை மாதிரியாக பிள்ளைகளுக்கு முன்வைக்கலாம்.

•             நேர்மறை மற்றும் ஊக்கமளிக்கும் அணுகுமுறைகளை பின்பற்றவும். பெற்றோர்களாகிய, நீங்கள் எண்ணியுள்ள அணுகுமுறையைப் குறித்து கவனமாக இருப்பது முக்கியமாகும். அவ்வாறு நீங்கள் அவதானத்துடன் இருந்தால் உங்கள் பிள்ளை ஊக்கமிளக்காமலும், விரக்தியடையாமலும் இருப்பதற்கு நீங்கள் ஏதுவாக அமையலாம்.

•             உங்கள் குழந்தைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலக்குகளை நியமிக்கவும். உங்களுடன் சேர்ந்து ஒரு அட்டவணையை உருவாக்க அவர்களுக்கு உதவுங்கள், அவர்கள் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி அதில் தெளிவாக குறிப்பிடுங்கள் இதன் ஊடாக உங்கள் பிள்ளைகளும் அதுகுறித்து அறிந்து கொள்வார்கள். அவர்களும் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பதில் சற்று கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.

•             நாள் முழுவதும் எவ்வளவு தான் பணிச்சுமையுடன் இருந்தாலும் குடும்பத்துக்காக நீங்கள் ஒதுக்கும்  நேரத்தை தவறவிட வேண்டாம். இதுபோன்ற தருணங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளின் மன அழுத்தத்தை விடுவியுங்கள், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், அவர்களின் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்துவதற்கான களமான அதனை பேணிடுங்கள்மிக முக்கியமாக ஒன்றாக அவர்களை சிரிக்க அனுமதிக்கவும். கற்றல் என்பது வெறுமனே புத்தகங்களை கற்பதன் மூலமும், இணையவழி பாடங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியாது.

•             ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் பணிச்சுமையின்படி, அடுத்த நாளுக்கான அட்டவணையைப் பற்றியும், அட்டவணையின் பிரகாரம் எவ்வாறு நேரம் செலவிடவேண்டும் என்பதைப்ப பற்றி விவாதிக்கவும், இதனால் அனைவரும் அடுத்த நாளுக்கு தயாராக இருந்திட முடியும்.

•             உங்களுக்கு கூடுதல் உதவி தேவை என நீங்கள் நினைத்தால் ஆசிரியர்கள், நண்பர்கள் அல்லது பிற பெற்றோரிடமிருந்து உரிய ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கு தயங்க வேண்டாம்.

 

இந்த சவாலான காலப்பகுதியில் மிகவும் அமைதியான மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதற்கான பயணத்தைத் தொடங்க இந்த புள்ளிகள் நிச்சயமாக உங்களுக்கு உதவிடும். சவால்களை சமாளிக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?, என்ன செய்ய வேண்டும்?, என்பது பற்றிய மன தெளிவு மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஆகையால், நம்முடைய அன்பான குழந்தைகளுடன் தற்போதைய சூழ்நிலையில் தலையிட சிறந்த வழிகளைக் கண்டுபிடிப்பதில் இருந்து நமக்குத் தடையாக இருக்கும் தடைகளை முதலில் சமாளிப்போம்.

 

குறிப்புகள்:

•             விதிகள் மற்றும் கொள்கைகளை அமைக்க, பெற்றோர்களாக உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்

•             ஈடுபாட்டுடன் இருங்கள்

•             நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் மனப்பான்மையைப் பேணுங்கள்.

•             உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நடத்தை மாதிரியாகக் முன்வைக்கவும்.

•             உங்கள் பிள்ளைக்கு தினசரி அடைய வேண்டிய இலக்குகளை அமைக்கவும்.

•             குடும்பத்துடனான நேரத்தை தவறவிட வேண்டாம்.

•             அடுத்த நாள் ஒரு குடும்பமாக கூட்டாகத் திட்டமிடுங்கள்.

•             ஆதரவு கேட்க தயங்க வேண்டாம்.