Sorry, you need to enable JavaScript to visit this website.

கோப்பை ஒன்றை பயன்படுத்த கற்றுக்கொடுத்தல்| Growingup Sri Lanka

கோப்பை ஒன்றில் பருகுதல்

உங்கள் குழந்தைக்கு நீங்கள் முதலில் ஒரு கோப்பையை கொடுக்கும்போது, அதிலிருந்து பருகுவது எவ்வாறு என அவர்களுக்கு தெரியாது. சில நேரங்களில் குடிப்பதற்கோ கோப்பையை தொட்டுப்பார்க்கக் கூட விரும்ப மாட்டார்கள். பழக்கமானவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கும் புதியவற்றை பழகுவதற்கும் சிறிது காலம் எடுக்கும். எனவே கோப்பையில் இருந்து பருகும்படி கட்டாயப்படுத்தாதீர்கள். பதிலாக அதனை ஒரு சிறு வேடிக்கை விளையாட்டுடன் சிறிது சிறிதாக பழக்கப்படுத்தவும். அவர்களின் அட்டகாசங்களை ரசித்திட தயாராகுங்கள்.

படிமுறை 1:
முதலில், அவர்கள் கோப்பையையும், அதன் உள்ளே இருக்கும் திரவத்தையும் ஆராய்ந்து உணரட்டும்.

படிமுறை 2:
நீங்கள் அதை உங்கள் குழந்தையின் வாய்க்கு கொண்டு செல்லும் போது, உங்கள் குழந்தை கோப்பையை பிடித்து திரவத்தை மணந்து பார்க்கட்டும். பின்னர் மெதுவாக சிறிதளவு திரவத்தை உள்ளெடுக்க அவர்களுக்கு உற்சாகமளியுங்கள்.

படிமுறை 3:
இறுதியாக, உங்கள் பிள்ளை கோப்பையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உதவுங்கள்.


*Parents are required to accompany their children throughout the activities