குழந்தைகளை பள்ளிக்கு திரும்ப அனுப்புவது அல்லது முதல் முறையாக பள்ளிக்கு அனுப்புவது என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். கோவிட் தொற்றுநோயால் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியதோர் நிலை ஏற்பட்டது. அவர்களை வீட்டில் மற்றும் மெய்நிகர் வழியினூடாக பள்ளிக் கல்வியில் ஈடுபடுத்துதை மட்டுமே செய்யக்கூடிதாக இருந்தது. இருப்பினும், குழந்தை பராமரிப்பு வசதிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் மீண்டும் கற்றலுக்காக திறக்கப்படுவதால், குழந்தைகள் நீண்ட காலத்திற்குப் பின் பள்ளிக்குச் செல்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்வது சவாலாக அமையும்.
சிறு பிள்ளைகள் சாதாரணமாக வீட்டிலிருந்தோ அல்லது அன்பானவர்களிடமிருந்து விலகி செல்ல விரும்பாதவர்கள். வுpலகி செல்வது என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு போன்றே வளர்ச்சிக்கும் தாக்கத்தினை ஏற்படுத்திட கூடியதோர் நிலையாகும். அதுபோன்றே, கொவிட் தொற்று நோயினால் எம் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சுமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதார பின்பற்றல்கள் போன்று பலதும் நம் வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தின. இதுபோன்றதோர் சூழலினுள் மீண்டும் பாடசாலைக்கோ, பாலர் பாடசாலைக்கோ, முன்பள்ளிக்கோ குழந்தைகளை தயார்படுத்துவது இலகுவானதன்று. பெற்றோருக்கும் இந்நிலையில் தன் குழந்தையின் பாடசாலை பயணம் பெரிதும் நம்பிக்கையை தரவில்லை. இதனாலேயே குடும்பங்களும் குழந்தைகளும் இதனை பழகிட சற்று சிரமமாய் இருந்தது. எனவே இதற்காக சில ஒத்துழைப்புகள் தேவைப்பட்டதோடு, முக்கியமாக குழந்தையை புதிய முறைகளுக்கு பழக்கப்படுத்துவதன் பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே முயற்சி செய்ய வேண்டியதாயிற்று.
பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம்?
குறிப்புகள்:
குழந்தைகளை பிரச்சனைகளை அறியாத மகிழ்ச்சியானதோர் உலகின் உறவுகளாகவே நாம் அர்த்தப்படுத்துகின்றோம். சில சமயங்களில், 'ஐயோ, நான் மீண்டும் என் குழந்தைப் பருவத்திற்க...
Read Moreகுழந்தைகள் மீது அக்கறை (பராமரிப்பு) காட்டுவது இயற்கை. அக்கறை என்று குறிப்பிடும் போது இது பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் . மிகவும் எளிமையான செயல்கள...
Read Moreகுறிப்பு: உங்களின் அழகிய குழந்தையை அறிந்துக்கொள்வதற்காக தொடர்பாடல் மற்றும் பகிர்தல் அனுபவங்கள் தேவை என்பதை அறிவோம். இருவரும் இணைந்து செயற்படும் போது பணிகளை செய்...
Read More