குடும்ப வன்முறை அல்லது குடும்பங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகம், மிகவும் எளிமையான வார்த்தைகளில் விளக்க வேண்டுமானால்; வாழ்க்கைத்துணை அல்லது துணைவர் மீது அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான மேற்கொள்ளும் நடத்தையை குறிக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளில் பங்குகொள்ளும் எவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதோடு உணர்ச்சிவயப்பட்டும் காணப்படுவார்கள். குடும்பமாக வாழ்க்கையில இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்க முடியாத ஒரு சோகமான சூழ்நிலையாக இருந்தாலும், இது மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாகும் வழங்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. குறிப்பாக இது உங்கள் குழந்தைக்கு நீண்டகால தீங்குகளை ஏற்படுத்தும்.
வீட்டில் இடம்பெறும் வன்முறை செயற்பாடுகள் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?
வீட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளின் உணர்ச்சிகள் பாதிக்கப்படுவதோடு, உளரீதியாகவும் மற்றும் சமூக ரீதியிலான பாதிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இது அவர்களின் வளர்ச்சியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கலாம். சில குழந்தைகள் மற்றவர்களிடம் பச்சாதாபத்தை உணரும் திறனை இழக்கலாம். ஒருவேளை சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாக உணரத் தொடங்கலாம் அல்லது சமூக அசௌகரியம் அல்லது குழப்பம் காரணமாக எளிதில் சக உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியாமல் போகலாம் அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ன என்பதைப் புரிந்து கொள்ள இயலாமையால் பாதிக்கப்படலாம்.
குழந்தைகள் அவர்கள் வாழ்வில் செழித்து வளர்வதைக் காண அவர்கள் எந்தவொரு வயதிலும் பாதுகாப்பான மற்றும் அதற்கான உரிய சூழலில் வளர்வது இன்றியமையாத ஒரு விடயமாகும். ஆரோக்கியமான வளர்ச்சி என்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்தை மாத்திரம் சார்ந்ததாக அமைந்திடாது. அது பெற்றோரால் கட்டியெழுப்பப்படும் குடும்ப சூழ்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட அனுபவங்களாலும் உடல் ஆரோக்கியம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த அனுபவங்கள் குழந்தையின் உணர்ச்சி, சமூக மற்றும் உளரீதியான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. வீட்டு அல்லது குடும்ப வன்முறை இடம்பெறும் சந்தர்ப்பத்தில் வீடு என்பது பாதுகாப்பான இடமாக அமையாது. மேலும் எந்நேரத்திலும் தங்களுக்கும் அவர்கள் விரும்பும் நபர்களுக்கும் என்ன நேரிடும் என்ற அச்சத்தில் குழந்தைகள் வாழ பழகிக்கொள்வார்கள்.
பாதிப்புக்குள்ளாகும் குழந்தையின் வயதினை அடிப்படையாக கொண்டு நாம் இதனை வரையறுத்துவிட முடியாது, குறிப்பாக தாயானவள் கருவுற்று இருக்கும் சமயத்தில் அவர்களின் மீது மேற்கொள்ளப்படும் எதிர்ப்பார்க்காத மற்றும் ஆரோக்கியமற்ற வன்முறை செயற்பாடுகள் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கக்கூடும்.
அடிக்கடி வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்களுடன் பாதுகாப்பான இணைப்புகளை வளர்ப்பதில் சிரமங்களை அனுபவிக்கலாம். அத்துடன் அவர்களின் வளர்ச்சி கட்டங்கள் செழிக்கத் தவறும் பட்சத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஒரு கைக்குழந்தை இதே காரணத்திற்காக தூக்கம் மற்றும் உணவு சீர்குலைவு மற்றும் தொந்தரவுகளை வெளிப்படுத்தலாம். பள்ளிப்படிப்பு வயதில் இருக்கும் குழந்தைகள் சக உறவுகளுடனும், பள்ளியில் மோசமான செயல்திறன் மற்றும் உணர்ச்சி உறுதியற்ற தன்மையுடனும் போராடலாம்.
இந்த தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் குடும்ப வன்முறையுடன் வாழும் குழந்தைகள் ஆய்வு செய்து பின்வரும் வழிகளில் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளன:
• உணர்ச்சி ரீதியாக தெளிவற்று இருத்தல்
• உணவு உட்கொள்ளல் மற்றும் தூங்குவதில் பிரச்சனை
• நண்பர்கள் மற்றும் பெரியவர்கள் மீது அடாவடித்தனமான போக்கு
• குறைந்த சுயமரியாதை
• தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் குறைவான பச்சாதாபம் மற்றும் அக்கறை
• தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் நடத்தைகள்
• தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட உடல் அறிகுறிகள்
• உணர்ச்சி ரீதியாக தெளிவற்று இருத்தல்
• கவலை மற்றும் மனச்சோர்வு
• மோசமான அவதானிப்பு திறன்
இந்த தீங்கு விளைவிக்கும் நடத்தைகள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான மற்றும் முழுமையான வளர்ச்சியைத் தடுக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, ஒரு குழந்தை இந்த பிரச்சினைகளுக்கு தானே தீர்வு காண்பது கடினமாகும். உதவியை நாடுவதற்கும் உறவுச் சிக்கல்களைத் தீர்த்து நடவடிக்கை எடுப்பது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது, இதனால் குழந்தைகள் வீட்டில் அமைதியான சூழ்நிலையை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதுவரை, உங்களால் முடிந்தவரை அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்கவும், விளையாடவும் அல்லது அவர்களுடன் உரையாடுவதற்கும் முயற்சி செய்யுங்கள். அவர்கள் கேள்விகளைக் கேட்டால், நேர்மையான பதில்களைக் கொடுக்க முயற்சிக்கவும், உங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதைத் தவிர்க்கவும். அவர்கள் நேசிக்கப்படுவதை உணர உதவுங்கள் மற்றும் முடிந்தவரை எந்த விதமான வன்முறையைக் கேட்பதையோ அல்லது பார்ப்பதையோ தடுக்கவும். உங்கள் குழந்தையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் பொருத்தமான முடிவுகளை எடுங்கள்.
குறிப்புகள்:
நீங்கள் குடும்ப வன்முறைகளை எதிர்கொள்ளும் பெற்றோராக இருந்தால்,
1. விவாதங்கள் மூலம் மோதல்களைத் தீர்க்க முயற்சிக்கவும்
2. நிபுணரொருவரின் உதவியை நாட முயற்சிக்கவும் அல்லது சிறந்த தீர்வுகளுக்கு வர ஆலோசனை செய்யவும்
3. உங்களது குழந்தைகளை முடிந்தவரை வன்முறையில் இருந்து விலக்கி வைக்கவும்
4. முடிந்தவரை அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
5. அவர்கள் நேசிக்கப்படுவதை உணரவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்
குழந்தைகளை பள்ளிக்கு திரும்ப அனுப்புவது அல்லது முதல் முறையாக பள்ளிக்கு அனுப்புவது என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். கோவிட் தொற்றுநோயால் குடும்பங்கள் தங்கள் க...
Read Moreகுழந்தைகளை பிரச்சனைகளை அறியாத மகிழ்ச்சியானதோர் உலகின் உறவுகளாகவே நாம் அர்த்தப்படுத்துகின்றோம். சில சமயங்களில், 'ஐயோ, நான் மீண்டும் என் குழந்தைப் பருவத்திற்க...
Read Moreகுழந்தை வளர்ப்பு என்பது சவாலான மற்றும் உற்சாகமான பணிகள் இரண்டுமே நிறைந்தது. அவற்றுள், பொறுப்புள்ள குழந்தைகளைப் பயிற்றுவிப்பது மிகவும் முக்கியமான மற்றும் சவாலான ...
Read More