Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

தொற்றுநோய்க்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்கு திரும்பிட உதவுதல்: பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

Nimali Buthpitiya

குழந்தைகளை பள்ளிக்கு திரும்ப அனுப்புவது அல்லது முதல் முறையாக பள்ளிக்கு அனுப்புவது என்பது பொதுவாக ஒரு சவாலான பணியாகும். கோவிட் தொற்றுநோயால் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியதோர் நிலை ஏற்பட்டது. அவர்களை வீட்டில் மற்றும் மெய்நிகர் வழியினூடாக பள்ளிக் கல்வியில் ஈடுபடுத்துதை மட்டுமே செய்யக்கூடிதாக இருந்தது. இருப்பினும், குழந்தை பராமரிப்பு வசதிகள், பாலர் பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் மீண்டும் கற்றலுக்காக திறக்கப்படுவதால், குழந்தைகள் நீண்ட காலத்திற்குப் பின் பள்ளிக்குச் செல்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து செல்வது சவாலாக அமையும்.

img

சிறு பிள்ளைகள் சாதாரணமாக வீட்டிலிருந்தோ அல்லது அன்பானவர்களிடமிருந்து விலகி செல்ல விரும்பாதவர்கள். வுpலகி செல்வது என்பது குழந்தையின் வாழ்க்கைக்கு போன்றே வளர்ச்சிக்கும் தாக்கத்தினை ஏற்படுத்திட கூடியதோர் நிலையாகும். அதுபோன்றே, கொவிட் தொற்று நோயினால் எம் வாழ்விலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. சுமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் சுகாதார பின்பற்றல்கள் போன்று பலதும் நம் வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தின. இதுபோன்றதோர் சூழலினுள் மீண்டும் பாடசாலைக்கோ, பாலர் பாடசாலைக்கோ, முன்பள்ளிக்கோ குழந்தைகளை தயார்படுத்துவது இலகுவானதன்று. பெற்றோருக்கும் இந்நிலையில் தன் குழந்தையின் பாடசாலை பயணம் பெரிதும் நம்பிக்கையை தரவில்லை. இதனாலேயே குடும்பங்களும் குழந்தைகளும் இதனை பழகிட சற்று சிரமமாய் இருந்தது. எனவே இதற்காக சில ஒத்துழைப்புகள் தேவைப்பட்டதோடு, முக்கியமாக குழந்தையை புதிய முறைகளுக்கு பழக்கப்படுத்துவதன் பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே முயற்சி செய்ய வேண்டியதாயிற்று.

பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம்?

  1. அதே வகுப்பு அல்லது பள்ளியின் மற்ற குழந்தைகளின் பெற்றோருடன் தொடர்பில் இருங்கள். இது திட்டத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோடு, குழந்தைகளை அவர்களின் பள்ளிச் சூழலில் மிகவும் வசதியாகவும் ஆதரவாகவும் உணரும் வகையில் பெற்றோராக பல விடயங்களை செய்திட உதவும்.
  2. ஆசிரியர்களிடம் பேசவும், குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியவும், சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியரிடம் கலந்தாலோசித்து, குழந்தையின் முதல் நாளின் தொடக்கத்திலேயே எவ்வாறு பிரித்திடுவது என்பதை தீர்மானிப்பது நல்லது.
  3. மாற்றத்தின் போது அமைதியாகவும் உறுதியுடனும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குரல் மற்றும் வெளிப்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். நிதானமான முகத்துடனும் சைகைகளுடனும் அமைதியான குரலைப் பயன்படுத்துங்கள், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள்.
  4. முடிந்தவரை உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த நேரங்களில் அவர்களுடன் இருங்கள். இது சவாலான காலங்களை கடந்து செல்ல குழந்தைகளை பலப்படுத்தும். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் குரல் கொடுக்கவும் அனுமதிப்பது அவசியம்.
  5. குழந்தைகளை மீள்திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கு இது ஒரு சிறந்த நேரம். கடினமான அனுபவங்களில் இருந்து மீண்டு, வெற்றிகரமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவும் திறன்களையும் சிந்தனை முறைகளையும் வளர்க்க அவர்களுக்கு உதவுங்கள். அறிவுள்ள பெற்றோராக குழந்தைகளின் மன உறுதியை மேம்படுத்துவது மற்றும் பதட்டத்தை குறைப்பது எப்படி என்பதை அறிய ஆதாரங்களைக் கண்டறியவும். தேவைப்படும் போதெல்லாம் தொழில்முறை ஆலோசனையைப் பெறவும்.
  6. குழந்தைகள் வீட்டில் சரியான தினசரி வழக்கத்தை உறுதிப்படுத்தவும். இது குட்டித் தூக்கம், உணவு, விளையாட்டு, கற்றல் மற்றும் இரவு உறக்கத்திற்கான வழக்கமான நேரங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மிகவும் அவசியமான பணிகளைத் தவறவிடாமல் செய்ய குழந்தைகளைப் பழக்கிட இது ஒரு சிறந்த வழியாகும். அது அவர்களுக்கு ஒழுக்க உணர்வையும் தருகிறது.
  7. குழந்தைகள் தொடர்ந்து பதட்டம் அல்லது நடத்தைப் பிரச்சினைகளின் அறிகுறிகளைக் வெளிகாட்டினால், சூழ்நிலைகளைப் புறக்கணிக்காதீர்கள். எந்த தாமதமும் இல்லாமல் நிபுணர் ஒருவரை நாடுங்கள்.

குறிப்புகள்:

  • மற்ற பெற்றோருடன் தொடர்பில் இருங்கள் - ஒருவருக்கொருவர் ஆதரவளித்திடுங்கள்.
  • உங்கள் குழந்தையைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஆலோசனைகளைப் பெறவும் ஆசிரியருடன் தொடர்பில் இருங்கள்.
  • அமைதியான மற்றும் உறுதியளிப்பதன் மூலம் பொருத்தமான நடத்தையை மாதிரியாகக் கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள், அவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களுக்காக இருங்கள்.
  • மீள்திறன் கொண்டவர்களாக மாறுவதற்கு, சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் திறன்களுடன் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும்.
  • வீட்டில் சரியான தினசரி வழக்கத்தை ஊக்குவித்திடுங்கள்.
  • தேவைப்படும்போது தொழில்முறை தலையீட்டை நாடுங்கள்.

 

Recommended Articles