பல்வகை அடங்கள் மற்றும் உடற்சார் செயற்பாடுகள்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

உங்கள் குழந்தையை ஒரு நிமிடம் பார்த்திடுங்கள். பிறந்த நாள் முதல் இதுவரை அவர்களின் வளர்ச்சி மிகவும் விந்தையானது அல்லவா? உறங்கிடல், தாய்ப்பால் பருகிடல், உடல் அசைவுகள் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தது போல் எண்ணம். குழந்தையின் இரண்டாவது வருடம் என்பது குழந்தையின் அபிவிருத்திக்கு மிகமுக்கிய காலமாகும். குழந்தை புதிதாய் செய்திடும் செயற்பாடுகளினால் புதுமையடைய, ஆடம்பரம் கொண்டிட பெற்றோர்களாக நீங்கள் தயாரா?

img

ஆரோக்கியமாக இருந்திட... செயற்திறனாகிட...

உங்கள் குழந்தை வளர்ச்சியடையும் அவர்கள் மிகவும் செயற்திறனாக இருக்க வேண்டிய தேவை ஏற்படும். செயற்திறனாக இருப்பது குழந்தையின் ஆரோக்கியமானதோர் வாழ்க்கை முறைக்கும், வளர்ச்சிக்கும் உறுதியான பக்கபலமாக அமைந்திடும். குழந்தையின் உடல் சக்தி, எடை மற்றும் செயற்திறனை மேம்படுத்திட, குழந்தைகளை அதிகம் விளையாட்டுகளில் ஈடுப்படுத்திடுவது சிறப்பானதாகும். உண்மையாவே குழந்தையோடு நடத்தல் போன்ற செயற்பாடும் தொடர்ந்து மேற்கொள்ளும் போது, அதிலும் முறையானதோர் அபிவிருத்தி ஏற்பாடுவதை உங்களால் அவதானிக்கமுடியும். குழந்தை தற்போது நடக்க ஆரம்பித்திருந்தால் ஓடிடக்கூடிய ஆற்றலை மிக விரைவாக எட்டிட முடியும்.
விளையாட்டு குழந்தைக்கு வழங்கிடுவது மகிழ்ச்சியை மட்டுமல்ல. மூளை வளர்ச்சி, பிரச்சினைகளை தீர்த்திடும் ஆற்றலை ஏற்படுத்திடல், மற்றையோருடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் நம்பிக்கையை அதிகரித்தல் போன்று பல விசேடம்சங்களை இதனூடாக வழங்குகிறது. புளொக்ஸ் போன்ற விளையாட்டு பொருட்கள் குழந்தையின் நகர்த்திடும் ஆற்றல் போன்று கண் - கைக்கான தொடர்பினையும் அதிகரித்திடும்.

இதில் குழந்தை விளையாட அதிக வாய்ப்பிளை வழங்கிடுவதே முக்கியமானதாகும். நிபுணர்கள் எடுத்துகாட்டிடும் விதத்தில், 1 முதல் 3 வயதிற்கிடையேயான குழந்தைகள் நாளொன்றிற்கு 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை பல்வகை செயற்பாடுகளில் ஈடுப்படுத்துவது சிறப்பானதாகும். இச்செயற்பாடு முறையானதாகவோ முறையின்றியோ சுதந்திரமாக ஈடுப்படும் விதமாக இருப்பது சிறப்பாகும். ஒரு நேரத்தில் இவ்வனைத்துமே மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், நாள் முழுதும் பல்வகை செய்பாடுகளில் குழந்தையை ஈடுப்பட செய்திட முடியும். 1-3 மணித்தியாலங்களே குழந்தைகளை இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுப்பட செய்திடும் குறைவான காலம் என்பதை கருத்தில் கொள்க. சில விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் விதத்தில் முறையான மற்றும் முறையற்ற விளையாட்டுகள் என இரு விதத்திலும் ஈடுப்படுத்திட முடியும்.
முறையான செயற்பாடுகள் - குழந்தை மேற்கொள்ளும் எந்தவொரு விளையாட்டையும், எந்த விளையாட்டு பொருளில் என்பதை பெரியவர் ஒருவர் தீர்மானித்தல்.
அனுகூலம் - இதன்போது குழந்தைக்கு உங்களின் உதவி கிடைப்பதோடு அவர் விரும்பியதை செய்திட முடியாது. உங்களின் உதாரணத்திற்கமைய அவர் பயின்றுகொள்வார்.
உதாரணமாக – ‘செயற்பாடு’ உடன் பாடலொன்றை பாடிடல், அச்சு விளையாட்டு, சங்கீத வகுப்பு போன்று கலைசார் செயற்பாடுகள் அல்லது வளர்ச்சியின் தன்மைக்கமைய கால்பந்து, ஜீம்னாஸ்டிக் போன்ற விளையாட்டு குழுக்களுக்கும் குழந்தையை இணைத்திடும் வாய்ப்பு உள்ளது.
சுதந்திரமாக விளையாடல் - முறையற்ற விளையாட்டுகளினால் விளையாட்டின் தன்மையை தீர்மானித்திடும் என்பதோடு அவர்களுக்கான விளையாட்டு பொருளினை தெரிவு செய்து வழங்கிட முடியும். அவருக்கு பொருந்திடும் விளையாட்டினை அவரே உருவாக்கிட முடியும்.
அனுகூலம் - குழந்தையின் ஆராய்தல், பரிசோதித்தல் மற்றும் ஆக்கத்திறனுக்கு வழிவகுத்திடும்.
உதாரணம் - பின்பற்றல், உடையணிதல், நீர் அல்லது மணலினால் விளையாடுதல், விளையாட்டு மைதானத்தில் விளையாடல் (வலுக்கல், ஊஞ்சல், விளையாட்டு வீடு, உயரத்திற்கு ஏறுதல் போன்றவை)
இரண்டாவது வருடத்தில் முதலில் செய்ய வேண்டியது
முதல் 12 மாதங்களில் குழந்தையின் பிறப்பு எடை மூன்று மடங்குகளில் அதிகரித்திடும். இடுத்த வருடத்தில் உறுப்புக்களின் வளர்ச்சி சற்று மந்தமாகிடும். முதல் மற்றும் இரண்டாவது பிறந்தநாளிற்கிடையேயான காலத்தினுள் 
குழந்தையின் எடை 1.5 – 2.5 கி.கி (3-5டடிள) மட்டுமே அதிகரித்திடும். உடல் வளர்ச்சி இவ்வாறு குறைந்தாலும், நடத்தல் மற்றும் பேசிடல் போன்ற புதிய திறன்களுடன் குழந்தையின் மனது மிகவும் பரப்பரப்பாகிட ஆரம்பித்திடும்.
முதல் நடவடிக்கை – உங்கள் குழந்தை இன்னமும் நடக்க ஆரம்பிக்கவில்லையாயினும், அதனை மிக விரைவாக ஆரம்பித்திடும். குழந்தையின் முதல் தடம் தடுமாற்றத்துடன் இருந்தாலும் முறையாக குழந்தையின் தன்நம்பிக்கை அதிகரித்திடும்.
குழந்தைக்கு பக்கபலமாகிடுங்கள் - குழந்தை நடக்க தொடங்கிய பின் முடிந்தவரை குழந்தையோடு நடந்திடுங்கள். அவரின் வேகத்தின் அளவிற்கு இல்லையாயினும் இருவருக்கும் இதுவோர் உடற்பயிற்சியாக அமைந்திடும். குழந்தை எழுந்து நிற்க முயற்சித்திடும் காலம் என்பதால் உடல் சார் விளையாட்டுகளில் ஈடுப்படுதல் சிறப்பானதாகும்.
முதல் “பேச்சு” – குழந்தை உங்கள் கதைக்கு முறையான பதிலளிக்காவிடினும், நீங்கள் கூறுவதை அவர்கள் நன்றாக உணர்ந்திடுவார்கள். அவர்கள் பேசிடும் முன்னரே உங்கள் வார்த்தைக்கான அர்த்தத்தினை அறிந்திருப்பார்கள். உங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது வேறொரு காரணியாகும்! முதல் வருடத்தில் குழந்தை மொழியின் சத்தத்தினை விரும்பினாலும், தற்போது அடுத்த கட்டத்தினை அடைந்திடும் காலம் வந்துள்ளது.
அவர்களோடு இருந்திடுங்கள் - எளிய சொற்களை பயன்படுத்திடுங்கள், அவசரமின்றி பேசிடுங்கள், ஒரே வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பேசிடுங்கள். பசி அல்லது வயிறு நிரம்பியுள்ளது என்பதை தெரிவித்திட ‘ இன்னும்’ மற்றும் ‘போதும்’ போன்ற வார்த்தைகளை உணவு ஊட்டிடும் போது பயன்படுத்திடுங்கள்.
இது ‘சிறு வயதில் நான்’ என எண்ணிடுங்கள் - நீங்கள் செய்திடும் அனைதயும் உங்கள் குழந்தை பின்பற்றிடும் என்பதை கவனத்தில்கொள்க.
குழந்தைக்கு பக்கபலமாகிடுங்கள் - ஆடிட அல்லது அங்கும் இங்கும் செல்ல, குழந்தை உங்களை பின்பற்றிடும் விதத்தை அவதானித்திடுங்கள். ‘ஐந்தினை’ போட்டிய கைளை காட்டுங்கள். அதனை பின்பற்றுவதை நீங்கள் அவதானிக்க முடியும். ஒரே சொல்லினை மீண்டும் மீண்டும் பயன்படுத்திடும் போது குழந்தையும் அதனை கூறிட முயற்சித்திடும். இது குழந்தைக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான செயற்பாடாகும். குழந்தை கூறிட முடியாத சொற்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அவதானிப்புடன் இருந்திடுங்கள்.
இச்செயற்பாடுகளை உங்கள் குழந்தை இன்னும் எட்டவில்லையாயின் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் விசேடத்துவமானவர்கள் என்பதோடு அவர்கள் வளர்வது அவர்களுக்கே உரிய முறையிலாகும். பிரச்சினைகள் இருப்பதாக உணர்வீர்களாயின் உங்கள் சுகாதார சேவை பிரதிநிதியை சந்தித்திடுங்கள்.

மூலக்குறிப்பு
▪    Ertem IO, Krishnamurthy V, Mulaudzi MC, et al. Similarities and differences in child development from birth to age 3 years by sex and across four countries: a cross-sectional, observational study. Lancet Glob Health 2018; 6(3):e279-91. 
▪    Okely AD, Ghersi D, Hesketh KD, et al. A collaborative approach to adopting/adapting guidelines – The Australian 24hour movement guidelines for the early years (birth to 5 years): an integration of physical activity, sedentary behavior, and sleep. BMC Public Health 2017; 17(Supple 5):869. doi: 10.1186/s12889-017-4867-6. 
▪    Shelov SP & Altmann TR (Eds.). (2009). American Academy of Pediatrics. The complete and authoritative guide Caring for your baby and young child birth to age 5 (5th ed.). USA: Bantam Books. 
▪    Society of Health and Physical Educators (SHAPE). Active start: A statement of physical activity guidelines for children from birth to age 5. 2nd ed. Reston, VA: SHAPE America; 2009. Available at: https://www.shapeamerica.org/standards/guidelines/activestart.aspx (Accessed August 8 2018)  
▪    Tremblay MS, Chaput J, Adamo KB, et al. Canadian 24-hour Movement Guidelines for the Early Years (0-4 years): An integration of physical activity, sedentary behaviour, and sleep. BMC Public Health 2017; 17(Suppl 5):874 doi 10.1186/s12889-017-4859-6. https://pathways.org/growth-development/toddler/milestones/ (Accessed August 8 2018)     https://pathways.org/topics-of-development/play/ (Accessed August 8 2018)  https://pathways.org/watch/parents-guide-structured-vs-unstructured-play/ (Accessed August 8 2018)  

Recommended Articles