குழந்தையின் உறக்கம் பற்றி அறிவோம்

Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

‘குழந்தையை உறங்க வைப்பது எவ்வாறு?’ இது ஒவ்வொரு பெற்றோரும் எதிர்கொள்ளுமோர் பிரச்சினையாகும். உலகம் முழுதுமான பெற்றோர் பின்பற்றிடும் வழிமுறைகள் பற்றி இக்கடிதத்தில் பார்ப்போம்.

img

குழந்தைகள் உறங்கிடும் விதத்தில் நாட்டிற்கு நாடு வேறுப்படுவது அவர்களை உறங்க வைக்கும் விதத்திலேயே ஆகும். நேரம் மற்றும் உறங்கும் கட்டிலில் பின்பற்றிடும் வழக்கங்களுக்கமைய இது மாறுப்படும். எவ்வாறாயினும், மகிழ்ச்சிக்குரிய காரணிகளாக பல பழக்கங்கள் காணப்பட்டாலும், குழந்தை நாளொன்றுக்கு 11 – 14 மணித்தியாலங்கள் சிரிதோர் உறக்கம் உட்பட முழுமையான இரவு உறக்கம் கண்டிப்பானதாகும்.
உறக்கம் என்பது குழந்தையின் வளர்ச்சிக்கு மற்றும் அபிவிருத்திக்கான அத்தியாவசிய காரணியாகும். இது உடலுக்கும் புத்துயிர் தந்திடுமோர் காரணியாகும். சரியான உறக்கமில்லையாயின் அதிக கலோரிகளை உட்கொள்ள முனைவதோடு வயதிற்கு மேலான அதிக எடையும் ஏற்படுவதற்கு இடமுண்டு.
உறங்கிட தயார் செய்தல
பரிசோதனைகளுக்கமைய நாளொன்றில் இரவு உறக்கத்திற்கு முன்னர் ஒரே முறையிலான வழக்கங்களை பயிற்றுவித்தல் சரியான தூக்கத்திற்கு ஏதுவாகமையும். இது போன்ற வழக்கங்களை இன்னுமும் பயிற்சியளிக்கவில்லையாயின் தாமதம் இல்லை. தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய, சூடான இடங்கள், தடவிக்கொடுத்தல் மற்றும் அமைதியாக இருப்பதின் மூலம் 3 நாட்களுக்குள் குழந்தையிடையே சிறந்த உறக்கத்திற்கான வழக்கத்தினை ஏற்படுத்திட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் குழந்தையையும் உறங்கிடும் முன் அமைதியாக்கிட, தினமும் ஒரே வழக்கத்தினை கையாளுங்கள். இதனால் குழந்தை தன் உறக்கத்தை அதற்கேற்ப வடிவமைத்திடும்.
உறங்கிட தயாராகும் போது இலக்ட்ரோனிக் அங்கங்களை வழற்குவதை தவிர்க்கவும். தொலைக்காட்சி, தொலைப்பேசி, டெப்லட் போன்ற அம்சங்கள் உறக்கத்தினை குறைத்திடும் காரணியகமைகிறது. அத்தோடு அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய தொடு திரை (touchscreen) பயன்படுத்திடும் ஒவ்வொரு மணித்தியாலமும் குழந்தையின் உறக்கம் 15 நிமிடங்களில் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
உறங்கிட செய்தல்
குழந்தைகளை உறங்கிட செய்ய உலகம் முழுதுமான பெற்றோர் பயன்படுத்தும் முறைகள் பற்றி இணைய வழியாக தேடிப்பார்த்திடுங்கள். பல்வேறு நாடுகளில் கையாளும் வெற்றிகரமான முறைகள் பற்றிய கற்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. எனவே குழந்தையை உறங்கிட செய்திடும் புதியதோர் முறையை உங்களால் கண்டறிந்திட முடியும். ஏவ்வாறாயினும், ஒவ்வொரு பெற்றோரினதும் பிரார்த்தனை குழந்தையின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வே.
உறங்கிடும் நேரத்தை மாற்றியமைத்தல

img

•    சாதாரணமாக மத்திய கிழக்காசிய நாடுகளின் குழந்தைகள் மற்றும் தாய்மார் இரவு 11 மணியளவில் உறங்கிட சென்று காலை 9 மணியளவில் விழிக்கிறார்கள்

•    பிரேசிலின் குழந்தைகள் மற்றும் தாய்மார் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலான காலத்தையே தெரிவு செய்கிறார்கள்


•    இருப்பினும், மத்திய கிழக்காசிய நாடுகளின் குழந்தைகள் 12 மணித்தியாலத்திற்கு அண்மித்த காலத்தினை உறக்கத்திற்காக பயன்படுத்துவதோடு, பிரசிலின் குழந்தைகள் சிறு தூக்கம் உட்பட 12 மணித்தியாலங்களிற்கும் அதிக காலத்தினை செலவிடுகிறார்கள்.
இம்முறை உங்களுக்கு ஏற்றதா? உறங்கிடும் நேரம் மற்றும் விழித்திடும் நேரம் எதுவாயினும், அதன் நோக்கம் குழந்தை போதுமான உறக்கத்தினை பெறுவதே. மிக முக்கியமானது உங்கள் வீட்டின் அன்றாட வேலை நேரங்களுக்கமைய அவர்களை தயார்படுத்தலே முக்கியமானதாகும்.
பகலில் உறக்கம்

img

குழந்தைகளின் உறக்கம் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராச்சிகளின் அடிப்படையில் பின்வரும் தகவல்கள் வெளிவந்துள்ளன
•    குழந்தைகள் பொதுவாக இரவு 9 மணித்தியாலமும், பகலில் 3 மணித்தியாலங்களும் உறங்குகின்றனர்

•     பிரித்தானியாவில் 18 மாத குழந்தைகள் பகல் உறக்கம் உட்பட 13 மணித்தியாலங்கள் உறங்குகின்றனர்

•    சிறிய தூக்கத்திற்கு உரிமை கோரிடும் தென்ஆபிரிக்க குழந்தைகளாயினும் ஒப்பீட்டளவில் அவர்களும் 12 மணித்தியாலம் உறங்குகின்றனர். அந்நாட்டு குழந்தைகள் பொதுவாக 11 – 14 மணித்தியாலங்கள் உறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இம்முறை சிறந்ததா? குழந்தைகள் பகலில் உறங்குவது, அவர்கள் வெளிவிட்ட சக்தியை மீள்பெற்றுக்கொள்வதற்கே. இதனால் அவர்கள் செயற்திறனாவதோடு, அவர்களின் செயற்பாடுகளுக்கும் இலகு தன்மையை உணர்வார்கள்.

1. கட்டில் மற்றும் அறையின் பயன்பாடு

img

பல்வேறு கலாச்சாரங்களுக்கமைய குழந்தைகளின் உறக்கம் பற்றிய பரிசோதனை முடிவுகள் பின்வருமாறு
•    கொங்கோ நாட்டின் குழந்தைகள் தனது அறையில், படுக்கையினை தன் பெற்றாருடன் பகிர்வதோடு, தனி அறையில் உறங்கிடும் குழந்தைகளை விட சற்று தாமதமாகவே உறங்குகிறார்கள். இருப்பின் இவ்விருவர்களுமே 12 மணித்தியாலங்கள் உறங்குகின்றனர்.

•    மத்திய கிழக்கின் குழந்தைகளும் ஒன்றாகவே உறங்குகின்றனர். இம்முறை உங்களுக்கு ஏற்றதா? குழந்தைகளுடன் ஒரே அறையில் உறங்கிடுவது குழந்தைகள் போன்று பெற்றோருக்கும் இலகுவானது. இதில் சரி பிழை இல்லை. உங்களுக்கு சரியென்பதே சரியாகும்.

2. தனியாக உறங்கிடல்

img

குழந்தையின் உறக்கம் பற்றிய பரிசோதனைகளுக்கமைவாக
•    அவுஸ்திரேலியா மற்றும் நிவ்சிலாந்து குழந்தைகள் தனியாக தன் செயற்பாடுகளை செய்திட பெற்றோர் ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் தன் குழந்தையின் உறக்கம் பற்றி 30மூ பிரச்சினை இருப்பதாக கூறினாலும், இவர்கள் 13 மணித்தியாலங்கள் வரை உறங்குகின்றனர்.

•    கொங்கோவின் குழந்தைகளும் தனியாக உறங்குவதோடு விரைவாக விழிக்கின்றனர்.
இம்முறை உங்களுக்கு ஏற்றதா? உங்கள் குழந்தை தனியாக உறங்கிடும் பட்சம் இரவில் விழிப்பின் அவர்கள் மீண்டும் தனியாக உறங்கிட பழகிடல். இது உங்களுக்கோர் வசதியாகமையும்.
3. இரவு செயற்பாடுகள

img

உறக்கத்தின் முன்னதான செயற்பாடுகள் பற்றிய பரிசோதனைகளுக்கமைவாக
•    பெல்ஜீயத்தின் 1 – 4 வயதுடைய குழந்தைகளின் 40மூ மானோர் ஒரே இரவு நேர செயற்பாடுகளை பின்பற்றிட பழகியுள்ளனர்.

•    நெதர்லாந்தின் 1 – 2 வயதுடைய குழந்தைகளின் 50மூ மானோர் இரவு நேர செயற்பாடுகளை பின்பற்றிட பழகியுள்ளனர்.

இம்முறை உங்களுக்கு ஏற்றதா? இவ்வாறான தொடர் செயற்பாடுகளினால்இரவு நேரங்களிள் குழந்தைகள் அதிகம் உறங்குவது வெளிகாட்டப்பட்டுள்ளது. குளிக்கும் போதான செயற்பாடுகள் போன்றே உறக்கத்திற்கு முன்னதான கதை கூறல் போன்ற அம்சங்கள் குழந்தையுடனான உறவினை மேலும் வலுவாக்கிறது.
உறக்கத்தி;ன் முன்னதான செயற்பாடுகளை ஆரம்பித்திட தாமதிக்காதீர்கள். ‘வுiஅந கழச டிநன’எமது வீடியோவின் 5 முறையிலான உள்ளடக்கம் குழந்தைக்கு சுகமானதோர் உறக்கத்தை வழங்கிடும்.


மூலக்குறிப்பு
▪    Ahn YM, Williamson AA, Seo H, et al. Sleep patterns among South Korean infants and toddlers: Global comparison. J Korean Med Sci 2016; 31:261-9. 
▪    Blair PS, Humphreys JS, Gringras P, et al. Childhood sleep duration and associated demographic characteristics in an English cohort. Sleep 2012; 35(3):353-60. 
▪    Cheung CHM, Bedford R, Saez De Urabain IR, et al. Daily touchscreen use in infants and toddlers is associated with reduced sleep and delayed sleep onset. Scientific Reports 2017; DOI: 10.1038/srep46104 
▪    Dattilo AM, Reidy, KC, Uesugi K. Modifiable risk and protective factors for healthy growth among infants and toddlers: Development and application of a global survey [abstract]. 
▪    Nutrition and Growth Meeting, March 1-3, 2018, Paris, France. 
▪    Hirshkowitz M, Whiton K, Albert SM, et al. National Sleep Foundation’s sleep time duration recommendations: methodology and results summary. Sleep Health 2015; 1(1):40-43. 
▪    Mindell JA, Leichman ES, Lee C, et al. Implementation of a nightly bedtime routine: How quickly do things improve? Infant Behav Dev 2017; 49:220-27. 
▪    Mindell JA, Lee C, Sadeh A. Young children and maternal sleep in the Middle East. Sleep Med 2017; 32:75-82. ▪     Mindell JA, Sadeh A, Wiegand B, et al. Cross-cultural differences in infant and toddler sleep. Sleep Med 2010; 11(3):274-80. 
▪    Netsi E, Santos IS, Stein A, et al. A different rhythm of life: sleep patterns in the first 4 years of life and associated sociodemographic characteristics in a large Brazilian birth cohort. Sleep Med 2017; 37:77-87. 
▪    Teng A, Bartle A, Sadeh A, et al. Infant and toddler sleep in Australia and New Zealand. J Pediatr Child Health 2012; 48(3):268-73. 
▪    Yu X, Sadeh A, Lam HS, et al. Parental behaviors and sleep/wake patterns of infants and toddlers in Hong Kong, China. World J Pediatr 2017; 13(5):496-502.

Recommended Articles