





















உச்சரிப்புக்கான எழுத்துச்சங்கிலி
உச்சரிப்புக்கான எழுத்துச்சங்கிலி
படிமுறை 1: ஒரு கம்பளிப்பூச்சியின் உடலின் வடிவத்தை வண்ண அட்டை / பிரிஸ்டல் போர்டில் வரைந்து, அதை வெட்ட உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.
படிமுறை 2: கம்பளிப்பூச்சியின் உடலின் ஒவ்வொரு இடத்திலும் உங்கள் குழந்தையின் பெயரின் எழுத்துக்களை எழுதுங்கள். அத்துடன் பெயரின் சில எழுத்துக்களை ஒரு துணி பெக்கில் எழுதுங்கள். (இந்தச் செயலுக்கு மர பெக் (wooden pegs) சிறப்பாகச் செயல்படும்).
படிமுறை 3: இப்போது, கம்பளிப்பூச்சிக்கு சில கால்கள் தேவை என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்லுங்கள்! தங்களது பெயரைச் சரியாக உச்சரிக்க கம்பளிப்பூச்சியின் மீது சரியான எழுத்துக்களை பொருத்த வேண்டும். ஆகவே அவர்களின் சிறிய கைகளால் ஒவ்வொரு துணி பெக்கையும் கிள்ளி வரச் சொல்லுங்கள்.
உதவிக்குறிப்பு: உங்கள் பிள்ளை இதில் பயிற்சி பெற்றவுடன், வெற்று இடத்தில் ஒரு புதிய கம்பளிப்பூச்சியை உருவத்தை உருவாக்கி உங்கள் குழந்தையின் பெயரை அவர்களாகவே எழுதுமாறு கேளுங்கள்; உங்கள் குழந்தைகளுக்கு எண்கள் அல்லது பிற சொற்களைக் கற்பிக்க இந்த கைவினைப் பொருளைப் பயன்படுத்தலாம்.
ஏனையோருடன் பகிர
Recommended Articles

வடிவங்களுடன் படைப்பாற்றலை வடிவமைக்கலாம்.
படிமுறை 1: சதுரங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் போன்றவற்றை வண்ணக் காகிதத்தில் வரைந்து அவற்றை அடையாளம் காணுமாறு உங்கள் குழந்தைக்கு கூறுங்கள். படிமுறை 2: உங்கள் ...
Read More
ஒரு வரைபடத்தைப் பயன்படுத்தி உடலின் பாகங்களை அடையாளம் காணுதல்
படிமுறை 1: ஒரு பெரிய காகிதத்தில், ஒரு மனித உடலை வரைந்து, உடலின் பாகங்களைக் குறிப்பிட அம்புகளை பயன்படுத்துங்கள். உதாரணமாக கை, விரல், கண், மூக்கு போன்றவை. படிம...
Read More
ஒரு படத்தொகுப்பை (Collage) உருவாக்க பத்திரிகைகளிலிருந்து படங்களை வெட்டுதல்.
உங்கள் பிள்ளைக்கு செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் குழந்தைகளுக்கான கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொடுங்கள், மேலும் ஒரு படத்தொகுப்பை(Collage)உருவாக்க படங்களை வெட...
Read More