ஆரோக்கியமான உணவு" என்பதை எப்படி வரையறை செய்வீர்கள்?

நீங்களும் உங்கள் குடும்பங்களும் ஆரோக்கியமானவற்றை உட்கொள்ள முடியுமானவர்களாக இருக்க வேண்டும் எனில் ஆரோக்கியமான உணவுகளை இனம் காணுதல் மற்றும் வரையறை செய்வதற்குமான இயலுமைகள் இருத்தல் வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறை என்பது சாதாரண வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்களை நாளாந்த உணவு முறையில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் பெற்றுக் கொள்ளும் வகையில் பல்வகையான உணவுகளை உட்கொள்ளல் ஆகும். இது, புரதம், காபோஹைதரேட், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாதுப் பொருட்களை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக உங்களது குழந்தை பரவலான பல்வகை உணவை உட்கொள்ளும் ஒருவராக இருந்தால் அவன் அல்லது அவள் நன்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொள்ளும் ஒருவராக இருப்பார். ( https://bit.ly/30tXW99 )

முறையான உணவுப் பழக்க வழக்கம் என்பது வெறுமனே உங்களது குழந்தைகளுக்கு அவர்களது பதின்ம பருவம் நோக்கிய முறையான வளர்ச்சியை கொடுப்பதல்லாமல்  தொற்றா நோய்கள் மற்றும் ஏனைய பல சுகாதார நெருக்கடிகள் இல்லாத ஓர் வாழ்க்கைப் பாதையினை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றது. ( https://bit.ly/30tXW99 )

உங்களது குழந்தை சில மரக்கறிகள் மட்டில் ஒவ்வாமையுடணும் சில இனிப்பு மற்றும் துரித உணவுகளுக்கான முன்னரிமைகளுடனும் பிறக்கவில்லை என்பதையும், இவை பின்னாட்களில் சில வெளி தலையீடுகளால் உருவாக்கப்பட்டவை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளல் மிக முக்கியமாகும். எவ்வாறாயினும், எவ்வளவு விரைவாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களது உணவுப் பழக்க வழக்கத்தில் ஆரோக்கியமான ஊட்டச் சத்துக்களை அறிமுகப்படுத்துகிறீர்களோ அவ்வளவு இலகுவாக வாழ்வின் இறுதி வரைக்குமான ஆரோக்கியமான உணவுப் பந்தம் ஒன்றினை அவர்கள் ஏற்படுத்திக்கொள்வர்.(எஸ்.அமரசேகர, 2021).

உங்களது குழந்தைகள் நிறைவாக உண்ணவும் ஆரோக்கியமாக வாழவும் நீங்கள் எவ்வாறு உதவி செய்ய முடியும்? பல பெற்றோர்கள், தமது குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதாகவோ அன்றேல் குறைவாக சாப்பிடுவதாகவோ வருத்தப்படுகின்றனர். பெரும்பாலும் உங்களது குழந்தைகள் அல்லா வேளைகளிலும் ஒரே வகையான உணவையே உட்கொள்ள விரும்புகிறதா? உங்களது குழந்தைகள் நிறைவாக உணவருந்துவதற்கும் நீங்கள் குறைவாக மன வருத்தமடைவதற்கும் ஒரே வழி என்பது உணவருந்த வருகையில் உங்களது பணி என்ன என்பதையும் உங்களது பிள்ளைகளின் பணி என்ன என்பதையும் அறிந்துகொள்வதேயாகும்.

உங்களது குழந்தை ஒரே வகையான உணவை உண்பதற்கு விரும்பினால், என்ன உணவுகளை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பணி பெற்றோருடையதாக இருக்கும் நிலையில், என்ன உணவு என்பதை தீர்மானிக்கும் பெற்றோரது பணியினை அவன்/அவள் மேற்கொள்கிறார்.(எஸ்.அமரசேகர,2021)

•                             ஓர் பெற்றோராக, உணவு மற்றும் சிற்றுண்டி வேளைகளில் ஊட்டச் சத்துள்ள உணவுத் தெரிவுகளை வழங்க வேண்டியது கடமையாகும். என்ன, எங்கு, எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்.

•                             நீங்கள் வழங்கும் உணவில் எவ்வளவு உணவை அவன் அல்லது அவள் உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிவு செய்வது உங்களது சிறார்களின் பணியாகும். எவ்வளவு உட்கொள்ள வேண்டும் அல்லது அந்த நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டுமா? என்பதை உங்கள் குழந்தை தீர்மானிக்கிறது.

இந்த முறைமைகளை அனுசரித்துக்கொள்வது ஒருவேளை சில பெற்றோருக்கு கடினமாக இருக்கலாம். எனினும் இதனை நடைமுறைப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னாட்களில் இந்நடைமுறை உங்களது பிள்ளைகளை அவனது அல்லது அவளது உட்பசி அளவினை நம்பத் தூண்டுவதுடன் சில உணவுகள் மீதான வெறுப்பைத் தவிர்க்கும்.

உங்கள் பிள்ளைகளது ஆரோக்கிய உணவு முறைமைக்கு உதவும் மேலும் சில வழிகள்

•                             முடியுமானவரை குடும்பமாக இணைந்து உணவருந்துதல். குடும்பத்தை உணவு. குடும்பத்தில் உணவுகளை இனிமையாகவும் நேர்மறையாகவும் வைத்துக்கொள்ளல். உங்களது குழந்தைகள் உட்கொள்ளும் உணவின் வகைகள் அல்லது அளவுகள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தல். புதிய உணவுகளை உட்கொள்ளவதற்கான அழுத்தங்கள் சிறுவர்களை புதிய வகை மற்றும் வித்தியாசமான உணவுகளை ஏற்றுக்கொள்வதை குறைக்கிறது.

•                             உங்களது குடும்பங்களுக்கான உணவுகளில் ஆரோக்கியமான தெரிவுகளை மேற்கொள்தல். உங்களது உணவுத் தெரிவுகளை சிறுவர்கள் அவதானிப்பதுடன் உங்கள் உதாரணங்களையே பின்பற்றுகின்றனர்.

•                             உணவு நேரத்தினை இலகுவில் கணிக்கக்கூடியதாக வைத்திருத்தல். எல்லா நாளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் உணவை உட்கொள்ளல் (முடியுமானவரை). எல்லா வேலைகளிலும் உணவு மேசையிலேயே உணவருந்துதல்.

•                             தேவையான வேளைகளில் போதுமான உணவுகளை  உட்கொள்ளல் (உதாரணமாக குழந்தைகளுக்கு ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை) இதனால் உங்களது குழந்தை அதிக பசி வயப்பட்டு அழுத்தத்திற்கு உள்ளாதல் தவிர்க்கப்படும்.

அத்துடன் ஆரோக்கியமான உணவு குறித்து முன்வைக்கக்கூடிய  மிக முக்கியமான பரிந்துரை, உணவு வேளைகளில் அருகில் உள்ளவர்களுடன் அளவளாவுதல் மற்றும் உணவிலும் பேச்சிலும் மகிழ்தல் தவிர வேறு எந்த வேலைகளையும் செய்யாதிருத்தல். அதாவது, தொலைக்காட்சி உள்ளிட்ட திரைகளை கவனிப்பதையும் ஏனைய இடையூறுகளை தவிர்த்தல்.

 

திருமதி. சாயன அமரசேகர

Expert Name
Mrs. Shayana Ameresekere MHumNutr (Aus) RNutr(Aus), Nutritionist
Image
how-do-you-define-“healthy-food”