1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது

இந்த விடயம் தொடர்பில் நாம் ஆராய்வதற்கு முன்பதாக, covid19 தொற்றுநோய் தாக்கம் காரணமாக தற்போது உலகம் முழுவதும் நிலவிவரும் பயணத்தடைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றை சற்றே மனதில் கொள்ளவேண்டும். இவ்வாறானதொரு நிலையில் சிறுவர்களின் வாழ்க்கை அமைப்பானது வீட்டில் தங்கியிருப்பதாக அமைவதோடு, அவ்வாறான நிலையைப் பேணுவதற்காக சிறுவர்களின் மீது அழுத்தம் செலுத்தப்படுகின்றது. சற்றே நாம் உற்று நோக்கினால், கட்புல காட்சி நேரம் அதிகரித்து உடற் செயற்பாட்டு நேரம் குறைவடைந்திருப்பதை அவதானிக்க முடியும். இதன் விளைவாக, ஊட்டச்சத்தை குறைக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உணவு நுகர்வு அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். (எஸ். அமரசேகரே - 2021).

இந்த செயற்பாடானது பெற்றோருக்கு மிகவும் சவாலானதொன்றாகும். ஏனென்றால் அவர்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மூலம் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டியது மட்டுமல்லாமல், அவர்கள் உண்ணும் உணவின் மூலம் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதோடு உணவு நுகர்வையும் குறைக்க வேண்டும்.

ஊட்டச்சத்துக்களை நிர்வகிக்க உதவும் குறிப்புகள்

  1. உங்கள் குழந்தைகளை எப்போதும் ஏதேனும் ஒரு செயற்பாட்டுடன் ஈடுபடும் வகையில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். சலிப்பு நிலையே அதிகளவிளான சிற்றுண்டி (ளுயெமள) உட்கொள்ளும் பழக்கத்துக்கு சிறுவர்களை உள்ளாக்கின்றது. (வயதில் பெரியவர்களாக இருந்தபோதும் வயது பாகுபாடின்றி இப்பிரச்சனையை அனைத்து தரப்பினரும் எதிர்நோக்குகின்றனர்.) சிலவேளைகளில் நாம் சலிப்பான நிலையை உணரும் போது நம் மனதும் அதனுடன் சேர்ந்து பசியுடன் குழப்பமான நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். எனவே உங்கள் குழந்தையின் ஒவ்வொரு வேளையும் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முயற்சி செய்திடுங்கள்.
  2. உணவளிக்கும் நேரத்தை பொருத்தமட்டில் அதற்காக நீங்கள் பயன்படுத்தி வந்த அட்டவணையை தொடர்ந்து பேண முயற்சிக்கவும். சாதாரணமாக பாடசாலை நடைபெறும் நாளில் மதியம் 12 அல்லது 1 மணிக்கு மதிய உணவினை வழங்கினால் சில மணிநேரம் கழித்து தேநீரும் சிற்றுண்டியும் வழங்க வேண்டும். பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் அட்டவணையில் அதிகளவு திரவ ஆகாரங்கள் இருக்கும் போது உங்கள் குழந்தை பகல் வேளையில் என்ன உட்கொண்டது என்பதை நீங்கள் இழக்க நேரிடும். இ ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும். (எஸ். அமரசேகர – 2021 )
  3.  ஆரோக்கியமற்ற விருப்பங்களை விட ஆரோக்கியமான விருப்பங்களை உங்கள் வீட்டில் வைத்திருங்கள். இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகள் பொதுவாக குறைவான ஊட்டச்சத்து அடர்த்தி மற்றும் கொழுப்புகள், சர்க்கரைகள் அதிகமாக இருக்கும். 'மனதிற்கு வெளியே' என்ற பிரபலமான பழமொழியை நினைவில் கொள்ளுங்கள், எனவே குழந்தைகள் வீட்டைச் சுற்றி நிறைய குப்பை உணவுகளைப் பார்க்கவில்லை என்றால் அவர்கள் வழக்கமாக அதைக் கேட்பது குறைவாக இருக்கும்.
  4. ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவும், குறிப்பாக உங்கள் குழந்தை 3,4 அல்லது 5 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அவர்கள் நிச்சயமாக இது போன்ற உரையாடல்களைப் புரிந்துகொள்வார்கள், உணவு பற்றிய தகவலை அவர்களுக்கு தயங்காமல் வழங்கிடுங்கள். ஏன் நீங்கள் குறிப்பிட்ட உணவை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிடவேண்டும், அத்துடன் அத்தகைய பொருட்களை எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துங்கள்.
  5. வீட்டில் சமைத்த அல்லது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கும் போது எப்போதும் பொருட்களின் பட்டியலைப் படித்து, சர்க்கரை, செயற்கை சுவைகள் சேர்க்காத மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.
  6. உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டிகளை உண்பதை ஒரு விளையாட்டாக அல்லது மகிழ்ச்சியான ஒரு தருணமாக மாற்றிடுங்கள். பழங்களை அழகான வடிவங்களாக வெட்டி உங்கள் குழந்தையின் தட்டில் புன்னகையுடன் கூடிய முக வடிவமைப்பில் தயார் செய்து வழங்கவும். அல்லது உங்கள் குழந்தைகள் பெரியவர்களாக இருந்தால் நீங்கள் அவற்றை பல வழிகளில் நன்மை பயக்கும் என்பதை அறிவுறுத்துவதோடு அவர்களையும், சமையல் செயல்முறையில் ஈடுபடுத்தலாம். இது குழந்தைக்கு உணவைப் பற்றி கற்பிக்க உதவுவது மட்டுமல்லாமல், அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல்பாட்டையும் கொடுக்கிறது.
  7. ஒவ்வொறு நாளுக்குமான உணவுகளை முன்கூட்டியே திட்டமிட சமைத்திட முயற்சி செய்யுங்கள். பொதுவாக பெற்றோர்களாகிய நாங்கள் மிகவும் வேலைப்பழுவுடன் நேரமில்லாமல் இருப்போம், அன்றைய தினம் உணவு மற்றும் சிற்றுண்டிகளை தயாராக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு பல ஆரோக்கியமற்ற விருப்பங்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படாது.

இறுதியாக ஒருவிடம்  உங்கள் குழந்தைக்கு தினமும் வழங்கப்படும் உணவில் ஊட்டச்சத்து சரியான சமநிலையில் இல்லையென நீங்கள் உணர்ந்தால் உடனடியாக ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.

Expert Name
திருமதி ஷயனா அமரசேகர MHumNutr (Aus) RNutr(Aus) ஊட்டசத்து நிபுணர்
Image
1-5 வரையிலான வயதெல்லை கொண்ட சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை எவ்வாறு பேணுவது
Meta Title
சிறுவர்களின் ஆரோக்கியமான தினசரி உணவு முறையினை பேணல் Growing Up