Sorry, you need to enable JavaScript to visit this website.
Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

தாய்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டியதில்லை. தாய்மை என்பது உரு பெண்ணின் வாழ்வில் முக்கியமானதோர் படிக்கல்லாகும். அதனை ஒரு பெண்ணிற்கு இயற்கையளித்திடும் கௌரவமானதோர் பொறுப்பு எனவும் குறிப்பிடலாம். தாய்மையின் பின் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையாக மாற்றமடைகிறது. ஒரு பெண்ணாக கழித்த காலம் மாறி தாயாக புதியதோர் வாழ்விற்கு அர்த்தம் தந்திடும். இந்த உலகில் மற்றொரு அழகான உயிரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்திடும் ஒரு பெண், வாழ்க்கையில் பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

img

ஒரு குழந்தையின் வளர்ச்சியானது தாயால் பெரிதும் ஆதரிக்கப்படுவதோடு மாறாக பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. குழந்தையின் வாழ்வில் ஆரோக்கியமானதோர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது தாயின்  பங்கு இன்றியமையாதது. எல்லா தாய்மார்களும் இயற்கையாகவே தன் குழந்தை இவ் உலகத்திற்கு வருவதற்கு முன்பே தங்கள் குழந்தையின் நலனுக்காக பல விடயங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். இத் தியாகம் மற்றும் நோக்கம் சாவால்களை கொண்டது. எனவே தாய்மார்களாக, அவர்களின் பங்கு மற்றும் பொறுப்புகள் பற்றி முழுமையான புரிதல் இருந்தால், அத்தகைய சவால்களை அவர்கள் எளிதாக எதிர்கொள்ளலாம் மற்றும் அவர்களின் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஊக்கமளித்திடலாம்.

இந்த கட்டுரையில் தெளிவூட்டப்படும் விடயங்கள் மற்றும் பொறுப்புகள், ஒரு தாய்மை எவ்வளவு முக்கியத்துவத்தோடு, செல்வாக்கு மிக்கது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு குழந்தையின் முதல் உறவு, தாய்

img

ஒரு குழந்தையின் முதல் உணர்பூர்வமான உறுதியான பிணைப்பு தன் தாயுடன் கட்டமைக்கப்படுகிறது. குழந்தைகள் இவ்வுலகில் பிறக்கும்போது, குழந்தையுடன் இணைந்த முதல் நபரிடம் மற்றும் குழந்தையைப் பராமரிக்கும் முதல் நபரிடம்; அன்பு, அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வையே தேடுகிறார்கள். இத்தேவைகளுக்குத் தாய் பதிலளிக்கும் விதம், கவனிப்பு மற்றும் ஊடாடும் விதமே, குழந்தைகளின் சமூக மற்றும் உணர்ச்சித் திறன்களே, இவ்;  உலகத்தையும் உறவுகளையும் எப்படி உணர்கிறார்கள் என்பது பற்றிய உறுதியான அடித்தளத்தை குழந்தைக்கு அமைக்கிறது

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கிடல்

img

குழந்தைகள் வளரும்போது, அவர்களுக்கு பெற்றோரின் ஆதரவே அதிகம். இவ் விடயத்தில், தாய்மார்கள், நெருங்கிய பராமரிப்பாளராக இருப்பதால், குழந்தைக்கு சுதந்திரமாக திறன்களை ஆராய்வதற்கும் பயிற்சி செய்வதற்கும், குழந்தைக்கோர் நட்புறவான சூழலை வழங்குவதற்கான பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தையின் வளர்ச்சியை அவதானிப்பதுடன், தேவையான மேற்பார்வை மற்றும் ஆதரவுடன், அச்சுறுத்தல்களற்ற, பாதுகாப்பான சூழலில் குழந்தை விளையாடவும் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை எளிதாக்குவதும், ஒரு தாயின் முக்கியமானதோர் செயற்பாடாகும்

நடத்தைகளை வடிவமைத்தல்

குழந்தையுடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் ஒருவராக ஒரு தாயே, ஊடாடல்கள் மற்றும் அவதானிப்புகள் மூலம் குழந்தையின் நடத்தையைப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்பை பெறுகின்றார். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உணர்ச்சிகள் மற்றும் ஆளுமை பற்றி நன்கு புரிந்து கொள்ளும்போது குழந்தைகளின் நடத்தையை வடிவமைப்பது பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஒரு தாய் எப்போதும் தன் குழந்தையின் நடத்தையை முன்மாதிரியாக வைத்துக் கொள்ள முடியும்.

அன்பு, இரக்கம் மற்றும் அக்கறையைக் காட்டுதல்

ஒரு தாய் தன் குழந்தைக்கு கருணை மற்றும் அன்பின் வார்த்தைகளால் பேசும்போது, அது அன்பு, கருணை மற்றும் கவனிப்பு நிறைந்த மனதுடன் குழந்தை வளர்ப்பதற்கான சிறந்த வழியை உருவாக்கிடும். தாய் பதிலளிக்கும் விதத்தில் மற்றும் தொடர்பு கொள்ளும் விதங்களில் சிந்தனையுடனும், உணர்திறனுடனும் இருப்பது குழந்தையால் கவனிக்கப்படாமல் போகாது. எனவே பொருத்தமான மொழி, சமூக மற்றும் தொடர்பு திறன்களை வளர்ப்பதென்பது வீட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. ஒரு தாயின் தொடர்பாடல் அன்பு, கருணை, அக்கறை ஆகியவற்றினால் நிறைந்திருப்பின், குழந்தைகளின் வாழ்க்கையில் மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம். 

வழக்கமாக்கிடல் மற்றும் ஒழுக்கம்

img

வழக்கம் என்பது ஒரு குழந்தை தனது தாயிடமிருந்து முதல் முறையாக அனுபவிக்கும் ஒன்று. சாப்பிட ஒரு நேரம், தூங்க ஒரு நேரம், விளையாட ஒரு நேரம் என பட்டியல் நீள்கிறது. ஒரு தாய் தனது ஒழுங்கமைக்கப்பட்ட தினசரி வழக்கத்தினால், ஒரு குறிப்பிட்ட முறைக்கு நேரத்தை செலவிட கற்றுக்கொள்வதற்கு தனது குழந்தைக்கு உதவுவதோடு, நேர முகாமை, முன்னுரிமை மற்றும் ஒழுங்கமைத்தல் போன்றவற்றை கற்றுக்கொடு;கிறார்.

மேல் குறித்த பொறுப்புகள் மற்றும் பாத்திரங்களை ஒரு தாயாக தனது அன்றாட வாழ்க்கையை பேணிடும்  ஒரு பெண் தன் குழந்தையின் வாழ்வில் பல அதிசயங்களை செய்திடலாம். மேலும் இன்னும் பலவற்றைச் சேர்த்திடலாம். குழந்தைகள் மீதான தாய்மையின் சக்தி ஒருபோதும் காலாவதியாகாது. இது குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுதுமான வளர்ச்சிக்கு பக்கபலமாய் அமைந்திடும்.

குறிப்புகள்:

  • தாய்மையின் சக்தி குழந்தைகள் சிறியவர்களாகவும் பெரியவர்களாகவும் இருக்கும் போது அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும்.
  • உங்கள் குழந்தையுடன் வலுவான பிணைப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்கான ஆரம்பம்.
  • குழந்தை நட்பு மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழலை எளிதாக்குவதன் மூலம் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கவும்.
  • தாய் தன் குழந்தையை நன்கு அறிந்தால் நடத்தையை வடிவமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
  • உங்கள் அன்பைக் காட்டுங்கள், அன்பான வார்த்தைகளைச் சொல்லுங்கள் மற்றும் கவனமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
  • உங்களால் முடிந்தவரை எல்லா வழிகளிலும் முன்மாதிரியாக இருங்கள். உங்களைக் கவனிப்பதன் மூலம் உங்கள் குழந்தை சிறந்த வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொள்ளும்.

Recommended Articles