Sorry, you need to enable JavaScript to visit this website.
Cloud Background
Cloud Background
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element
Moon Element Star Element Star Element Star Element Star Element Moon Element Star Element Star Element Star Element Moon Element Star Element

ஆரம்பகால பிள்ளைப்பருவ கல்வி மற்றும் பராமரிப்பு செயன்முறையில் பாடசாலைக்கு தயாராகுதல் முக்கிய பங்கினை வகிக்கி;றது. பாடசாலைக்கு செல்வற்கான  பயணத்தின் ஆரம்பத்தினையே தயார்நிலை; குறித்து நிற்கின்றது. ஒரு தனி நபராக பாடசாலைச் சூழலில் நிலைத்திருக்க பெற வேண்டிய பல்வேறு திறன்கள் மற்றும் குணாதியசங்களால் தயார்நிலை என்பது புரிந்துக்கொள்ளப்படுகின்றது. பாடசாலைக்கான தயார்நிலை பிள்ளையின் திறனில் தொடர்புடையது என்றாலும் அது பிள்ளையின் ஆற்றலில் மட்டும் சார்ந்திருக்கவில்லை.

இங்கு தயார்நிலை என்று குறித்து நிற்பது  பிள்ளையின் கற்றலில் குடும்பத்தின் தயார்நிலை பாடசாலையின் ஆதரவு எனபவற்றையே . வெவ்வேறு தயார்நிலைகளில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையினதும் கற்றல் தேவைக்கான பொறுப்பை பாடசாலைகள் கொண்டிருந்த போதும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிலிருந்து பாடசாலை செல்லலுக்கான சரியான நேரத்தில் ஓர் சுமூகமான மாற்றத்திற்கு தயார்ப்படுத்தல் பெற்றோரகளின் பொறுப்பாகும்.

ஏன் பாடசாலைக்கு தயார்நிலை முக்கியமானது?

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பாடசாலை சூழலில் விருத்திப் பெற்று வளர்ச்சியடைய விரும்புவார்கள்.ஆரம்பகால பராமரிப்பு மற்றும் கற்றல் அனுபவங்களால் பிள்ளைகளின் பாடசாலை தயார் நிலை பெரிதும் பாதிக்கப்படுகின்றது என்பதை அறிந்துக்கொள்ளல் முக்கியமாகும். ஆரம்பகால பராமரிப்பு மற்றும் கற்றல் அனுபவங்கள் பாடசாலையில் பிள்ளைகள் வெற்றிபெறுவதற்கான அடிப்படை திறன்கள்  மற்றும் ஆற்றல்களை விருத்தி செய்ய உதவுகின்றன.

பாடசாலை தயார்நிலை என்பதை பலரும் தவறாக புரிந்துக்கொள்கின்றனர். அது மொழி மற்றும் கணிதத்திறன் வளர்ச்சியை மட்டும் குறித்து நிற்கவில்லை. மொழி மற்றும் கணிதத்திறன் என்பவற்றையும் தாண்டி ஒரு பிள்ளை உணர்ச்சிகள் சமூக உடல்சார் மற்றும் அறிவுசார் திறன்கள் போன்ற பண்புகளின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது. புதிய சூழ்நிலையில் சுமூகமாக நடக்கவும் வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லல் மாற்றத்திற்கான நிலையினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் இவ்வகையான பண்புகள் மற்றும் திறன்கள் உதவுகின்றன.

•             பாடசாலைக்கா க தயாரான ஓர் பிள்ளை:

•             சிறிய வேலைகளை தாங்களாகவே  செய்துக்கொள்வர்.

•             கழிப்பறை செல்லலுக்கு பழகியிருத்தல்.

•             அறிவுறுத்தல்களை  பின்பற்றி  நடக்க  முடிதல்

•             நம்பிக்கை

•             வளைவுகளை எடுக்க முடிதல்

•             பகிர்தல் உதவிடுதல் போன்ற சமூக திறன்களை வெளிப்படுத்த முடிதல்

•             அவர்களின் தேவைகளை தெரியப்படுத்த முடிதல்

 

 முன்னதாகவே  பிள்ளைகளின்  இந்தத்  திறன்கள்  மற்றும் மனப்பான்மையினை வளர்ப்பதில் பெற்றோர்கள் எவ்வாறு  ஈடுபட முடியும்?

 

•             பிள்ளைகள் கழிப்பறை பயிற்சிக்கு  தயாரக இருக்கும் சரியான நேரத்தில் அவர்களுக்கான பயிற்சியினை வழங்கல்.

•             அவர்களாகவே உடை அணிதல் பாதணிகளை அணிதல் சப்பாத்து லேஸ்களை கட்டுதல் அவர்களின் மேசைகளை அடுக்கி வைத்தல் போன்ற சிறிய பணிகளை அவர்கள் செய்வதற்கு ஊக்குவித்தல்.

•             தினசரி செய்யும் வேலைகளை  பின்பற்ற  அவர்களை  பழக்கப்படுத்தல்.

•             பொறுமையாக இருத்தல், நன்றி கூறல் ,மன்னிப்புக் கேட்டல் ,அறிவுறுத்தல்களை பின்பற்றல்  மற்றும்  செவிமடுத்தல் போன்ற  நேர்மறையான நடத்தைகளை ஆரம்ப  வயதிலிருந்தே  பின்பற்ற க் கற்றுக்கொடுத்தல்.

•             அவர்களின் ஈடுபாட்டினை பாராட்டி  ஊக்கப்படுத்தல் மூலம்  நம்பிக்கை மற்றும் சுயமரியாதையினை உயர்த்திடுங்கள்.

•             சமூக  மற்றும் தொடர்பாடல் திறனை மேம்படுத்தவதற்காக எப்போதெல்லாம் உங்களால் முடிகிறதோ அப்போது அவர்களின் வயதில் உள்ள சக பிள்ளைகளுடன் உடல்சார்  விளையாட்டு  நடவடிக்கைகளில்  ஈடுபட சந்தர்ப்பங்களை வழங்குங்கள்.

•             பல்வேறு வகையான வேடிக்கை மற்றும் சுவாரஸ்யமான செயற்பாடுகள் மூலம் அன்பினை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள்.

பாடசாலை தயார்நிலை என்பது ஓர் கூட்டுப்பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கான பொறுப்பானது வீட்டிலிருந்து திட்டமிடப்பட்ட அமைவுகளுக்கு ஏற்ப செயற்படும் பாடசாலை சூழ்நிலைக்கு மாற்றம் பெறுவதற்காக  போதுமான  நம்பிக்கையுடன் காணப்படும் ஓர் பிள்ளை. மேற்குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களுடன் சிறப்பாக பொருந்தி அத்தோடு குடும்பத்தினரால் தொடர்ந்து ஆதரிக்கப்படும் பிள்ளை பாடசாலையில் சுயாதீனமாக செயற்படுவர். இச்செயற்பாடு அவர்கள் கல்விசார் பணிகளில் சுதந்திரமாக ஈடுபடவும் பாடசாலை சமூகத்தில் செழிப்பாக விருத்தி பெறவும் வழிகோலும்.

 

குறிப்பு:

பாடசாலை தயார்நிலைக்கு ஓர் பெற்றோராக உங்களின் ஈடுபாடு

•             சுய உதவித் திறன்களுக்கு பயிற்சியளித்தல்

•             சமூக நடத்தைகளை ஏற்றுக்கொள்வதற்கு பயிற்றுவித்தல்.

•             நாளாந்த நடைமுறைகளை பின்பற்ற பயற்சியளித்தல்

 

•             ஏனைய பிள்ளைகளுடன் சமூக தொடர்புகள்  மற்றும்  பிணைப்புகளை விருத்தி செய்தல்.

•             சுவாரஸ்யமான முறைகள் ஊடாக  கற்றல் செயற்பாடுகளுக்கான ஆர்வத்தினை வளர்த்தல்.

Recommended Articles